இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, October 4, 2010

எழுந்திரு அடைந்திடுவாய்...




வட்டமிடும் பருந்துகளாய் 
வளைத்திருந்த ஒருவட்டம் 
வறியவன் என்று கண்டு 
வழி மறந்த கதைகேள் 

உன் கைசெழுப்பில் 
உள்ளவரை நீ கண்ட
உறவு என்றவரெல்லாம் 
உதறிச்சென்றதைப்பார்

நல்ல உள்ளம் உள்ளவனாய் 
நன்றி எதுவும் நோக்காது 
நட்புக்காய் செய்தவைகளை 
நன்றி மறந்ததைப்பார் 

இயற்கையின் சீற்றத்தில் 
இருந்தவைகள் அழிந்திட 
இல்லமேனும் அற்று
இருக்கிறாய் நடைபிணமாய் 

இன்று உன் நிலைகாண
இதயம் படபடக்கிறது 
இருந்தும் இல்லாதவனாய் நீ 
இடிந்திருக்கலாகாது 

இன்நாளின் நிலை உணர்ந்து 
இனிய நாளை உருவாக்கு 
இணைந்திருக்கும் உறவுகளை 
இயன்றவரை சேர்ந்திரு

மலரும் நாட்களில் 
மன்னவனாய் நீ வந்து
மகிழ்ந்திருக்க வேண்டி 
மனதாற பிரார்த்திக்கிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

யாதவன் said...

கவிதை அருமை

சசிகுமார் said...

அருமை எப்பவும் போல் அழகான பகிர்வு.

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்
மிக்க நன்றி நண்பா தொடர்வருகையில் ஆனந்தம்

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்
மிக்க நன்றி நண்பா தங்களின் பாராட்டுகளில் படைக்கமுடிகிற மனம் கிடைக்கிறது நன்றி

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...