இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, October 11, 2010

ன்புச் சிறையினிலே....

அன்பெனும் சிறையிலடைத்து 
அதிர்ச்சியூட்டும் பாசத்தால்
அதிரச்செய்பவளே - உன்னால் 
அல்லல் படுவதில் அனலாகிறேன்

அன்பின் அவதியை 
அருந்தும் பொழுதுகளில் 
அகிலம் மறந்திருந்து 
அடிமையாகிறேன் உன்மடியில் 

அச்சமறியாக் காதலை 
அஞ்சாமல் பரிமாறியதில் 
அந்தம் காண்கிறேன் 
அதுவும் இன்பமாகிறது அம்பெய்தும் வேடனாய் 
அறிந்தெறிந்து தொடர்வதில் 
அகம் நிறைந்து தைக்கிறாய் 
அரும் மருந்தாகிறாய் 

அன்பே உன் இறுக்கத்தில் 
அறிவைத் தொலைத்து 
அகரம் முதல் ஆதிவரை 
அறிந்திடத் துடிக்கிறேன் 

அன்பு நிறைந்த சூழலாய் 
அன்பின் அமுதச்சுரப்பியாய் 
அன்பை மட்டும் அருந்திடச்செய்து 
அன்பில் மூழ்கிடச்செய்கிறாய்

அன்பில் விடுதலையற்று 
அன்புக் கைதியாய் 
அன்போடு மடிந்திட நாடி 
அன்பை வரிகளாக்கினேன் (உனக்காக)


குறிப்பு: இது எனது 200வது படைப்பு இதில் தூய அன்பினை கருவாக்கினேன் என்னை இத்தனை காலம் ஊக்குவித்த அத்தனை உறவுகளுக்கும் என் அன்பு நிறைந்த நன்றிகள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

சசிகுமார் said...

good post friend haseem keep it up

யாதவன் said...

Good keep it up

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

நன்றி நண்பா

தஞ்சை.வாசன் said...

தங்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு உங்களிடமிருந்து மீளாத அன்போடு என்னுயிரும் வாழ்ந்துக்கொண்டு..

மிகவும் அருமை அன்பின் வெளிப்பாடு... மிக்க நன்றி தோழா...

நேசமுடன் ஹாசிம் said...

@தஞ்சை.வாசன்

மிக்க நன்றி தோழா...

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...