இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, October 28, 2010

உன் நினைவுகளோடு...

கண்ட நாள் முதல் - அடைந்து 
கண்டிரா இன்பங்கண்டேன் 
கண்ணயரும் பொழுதாகினும் 
கண்ணெதிரில் உன்னோடு 


தித்திப்பின் உச்சத்தில் 
திகிலுரிக்கும் முத்தங்கள் 
திண்டாடும் இறுக்கத்தில் 
திழைத்திருந்த சுகங்கள் 
இன்பலோகம் நீயென
இளமைக்குத் தீனியானாய் 
இனியேது உலகமென 
இணைபிரியா உறவடைந்தாய் 


என்வலியும் நீ யுணர்ந்தாய் 
என்மருந்தாய் மாறிநின்றாய் 
எப்பொழுதும் பிரிந்திடா 
எழிலுலகம் வேண்டி நின்றாய் 


காலக்கொடியவனின் 
காரணிக் கோலங்கள் 
காட்டிய வழிசென்று 
காற்றினில் மிதந்து விட்டேன் 


தனிமையில் தவிக்கிறேன் 
தங்க நினைவுகளில் வாழ்கிறேன் 
தகல்களோடு மட்டும் 
தத்தளிக்கிறது என்வாழ்வு 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

சசிகுமார் said...

super

S.Sudharshan said...

super.. வாழ்த்துக்கள் :)

பிரஷா said...

அருமை... வாழ்த்துக்கள் நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...