இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 25, 2012

தீர்வுகள் பரிகாரங்களாகட்டும்..........


புத்த மதம் போதித்திராத 
புனித பூமிகள் தேடி
பௌத்தர்களின் அட்டூழியங்களால் 
அடிமைப்படுத்தப்படும் ஆட்சியாளர்கள் 


சுதந்திர நாடென்றும் 
சுதந்திரங்கள் உண்டென்றும் 
வாய்ப்பேச்சில் மாத்திரமுரைத்து 
சுயநலங்களுக்காய் மீறல்களும் அவர்களால் 


அன்று மீறிய சுதந்திரத்திற்காய் 
ஆயுதமேந்தினார்கள் அவர்கள் 
இன்று மீறப்படும் சுதந்திரங்கள் சேர்ந்து 
பேரழிவுக்கு வித்திடுகின்றன 


காபீர்களான காடையர்களே - நீங்கள்  
புனித பள்ளியில் புகுந்து நாசம் செய்து 
இஸ்லாத்தையே அவமதித்ததில் 
உம்நாசம் உம்கையாலானதை மறந்தீர்கள் 60ஆண்டு பழமை வாய்ந்த 
பள்ளிவாசலை அகற்றி 
புனித பூமி என்று அறிவிக்க 
உமக்கென்ன தகுதியிருக்கிறது 


ஒரு சமுகம் தந்த ஆதரவு மறந்து 
அவர்களுக்கே அனியாயமென்றால் 
உன் ஆட்சியிலெங்கே சமனிலை 
அனைத்து அதிகாரமுள்ள அல்லாஹ் 
உனை அழித்திடுவான்.........


சொத்துகள் சூறையாடியபோதும் 
உயிர்கள் பறிக்கப்பட்ட போதும் 
நிராயுத பாணியாய் விரட்டிய போதும் 
அடங்கித்தான் இருந்தார்கள் என்று 
அவமதிக்கிறீரா அநியாயம் செய்கிறீரா??


ஆனதெல்லாம் போதுமென்று 
திரும்பியுனை நோக்கினால் 
எரிந்திடுவாய் சாம்பலுமற்று 
பிறப்பில் வீரர்கள் நாங்கள் 


மதிக்கின்ற ஒரு சமுகத்தை 
மிதித்துப் பாவியாக்கிடாது 
பாதகமற்ற தீர்வுகளுடன் 
பரிகாரங்கள் செய்திடுங்கள் 
ஒற்றுமையென்றும் நிலைத்திடும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

VANJOOR said...

ASSALAMU ALAIKKUM W.R.B.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...