ஓர் தீக் குச்சியைத் தந்துவிட்டுப்போ
என்மனதில் கொழுந்துவிட்டெரியும்
தீ கொண்டத்தனையும் எரித்துவிட
பசியால் ஒரு பட்டாளம் பரிதவிக்கிறது
குசியால் ஒரு சாரார் கும்மாளமடிக்கிறார்கள்
பகிர்ந்தளித்திட ஒரு தீ மூட்ட வேண்டியிருக்கிறது
வயதால் விதவையாகி வஞ்சிக்கப்டுகிறாள் - மாது
வரதட்சனை வேண்டுமென்று புரட்டியெடுக்கிறான் - காளை
காலமது சொற்பமென வாழ்வைக் கற்றுத்தர
தீயிட்டல்லவா உருக்க வேண்டியிருக்கிறது
குழந்தையொரு செல்வம் செழிப்பும் அதிலுண்டு
மறந்த முதலாளர்கள் குழந்தைகளில்
சம்பாத்தியம் செய்கிறார்களே - அவர்களது
உடமைகளையும் சாம்பலாக்க வேண்டியிருக்கிறது
வேண்டாம் வேண்டாமென்று கூக்குரலிட்டும்
பாவம் மனிதர்களை வதைசெய்து
ஆட்சி பீடத்தில் சல்லாபம் காணும் - அரசன்
அவனின் ஆட்சியை கொழுத்த வேண்டுடியிருக்கிறது
4 comments:
சபாஷ்..
ம்ம்ம்ம்
அருமை சகோ
நன்றி தோழர்களே
மன அவதிகளைத்தானே எழுத்தால் கொழுத்திக்கொண்டிருக்கிறோம்.அருமை தோழரே !
Post a Comment