இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, March 29, 2012

பார் மகளே.... பார் !!


பார்..... பார் மகளே பார் ..!
பார் முழுதும் பரந்து கிடக்கும் 
படிப்பினைகளைப் பார் 


உலகமது நிரந்தரமற்ற பயணம் 
இருள் சூழ்ந்த பாதையில் 
பலதிசையும் கண்திறந்து பார் 


தேவைகளை நிவர்த்திக்கும் நாயன் 
அல்லாஹ்விடமே கையேந்தி 
அனைத்தையும் பெற்றிடப்பார் 


எம்மைக் குறையின்றிப்படைத்த 
உலகத்து வல்லோனுக்கே - என்றும் 
நன்றிக் கடமையுடன் பார் 


பண்பானவர்களின் மத்தியில் 
பக்குவமான பாசத்துடன் 
நடந்து கொள்ளப்பார் வெறுப்பானவர்களின் இடையே 
வேற்றுமை நீ மறந்து 
அரவணைத்து நடந்திடப்பார் 


ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் அறிவென 
உலவும்போதே உணர்ந்து 
அனுபவமாய் அறிந்திடப்பார் 


கல்வியது கற்கும் போதுதானென்று 
அந்தந்த வயதுக்குள் முனைந்து 
கற்றுக்கொள்ளப் பார் 


தீயன செயல்கள் கண்டால் 
தீயிலும் கொடியதென தீண்டாது 
விலகியே நடந்திடப்பார் 


உனக்கென ஒருவரால் 
தீயது செய்திடினும் - நீ 
அவருக்காய் நன்மை செய்திடப்பார் 


தாய் தந்தை இருகண்களினது
கலக்கமின்றிய செயல்களோடு 
இமையாய் நீயும் இருந்திடப்பார் 


உமக்காய் ஈருலகும் சுவர்க்கமாகி 
வெற்றிகளின் நாயகியாய் - நீயே 
திகள்வதை பார்த்து மகிழ்ந்திடுவாய் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உனக்கென ஒருவரால்
தீயது செய்திடினும் - நீ
அவருக்காய் நன்மை செய்திடப்பார் !

அருமை ! நன்றி !

ஹேமா said...

என் அப்பாவின் ஞாபகம் வருகிறது.அவரின் வாசனையைக் காற்றில் உணர்கிறேன்.அருமையான கவிதைகளைக் காண்கிறேன் உங்கள் பக்கத்தில் !

Blogging said...

நல்ல கவிதை ..

www.padugai.com

thanks

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...