இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 14, 2012

தொடரும் மனமிங்கு


நிம்மதிக்காய் நினைத்துப்பார்க்கிறேன் 
நிராயுதபாணியாய் நிலை தடுமாற்றங்கள் 
அடைந்தவைகளால் அல்லலுறுகிறேன் 
அயர்ந்த போதும் அவஷ்தையெனக்கு 


மனிதனாய்ப் பிறந்ததில் 
இத்தனை அவலங்களென்று 
வியந்துநிற்கும் விடையங்களை
விரைந்து நானும் வெல்ல முற்படுகிறேன் 


திடமான உறுதியும் 
பலமான நம்பிக்கையும் 
இறைவனளித்த வரங்களாகி 
தேற்றிய மனமிங்கு 
அமைதி கொண்டு ஆறுதலாகிறது 


சலனங்களெம்மை சரிசெய்யாத போது 
சறுக்கல்களாகும் வாழ்விற்கு 
சொந்தங்களும் பந்தங்களும் 
சொற்றொடர்களில் கிடைக்கிறது 


நீண்ட இடைவெளியில்
மீண்டும் மனந்திறந்திட 
வரிகள் தேடிநின்று 
தொடர்ந்திட நானும் முயல்கிறேன் 
நன்றிகள் நண்பர்களே 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

செய்தாலி said...

வாங்க தலைவரே வாங்க
உங்கள் பயணங்கள் சிறப்பாய் முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்
உங்கள் உறவுகளும் நீங்களும் நலம் என்று கருதுகிறேன்

வருக
தொடர்க
கவிப் பயணத்தை

Without Investment Jobs Available said...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

திண்டுக்கல் தனபாலன் said...

வாருங்கள் ... தொடருங்கள் ... நன்றி ...

atchaya said...

என் இனிய உறவே! தொடரட்டும் பயண அனுபவங்கள்!....அனைவரும் நலமா?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...