இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, March 24, 2012

நீயாகிய நான்....!!!


என் நாடித்துடிப்புகளில் 
தினமும் ஊடுருவும்  
உன் நினைவுகளில் 
என்னை நான் உணர்கிறேன் 


கண்மூட மறுக்கும் - 
உன் ஊடல்களின் நிழல்கள் 
சக்தி கொடுத்து சரிசெய்கிறது 
என்னை நானாக உணர்வதற்கு 


எம் உலகத்தின் அரசியாய் நீயானபோது 
காதல் கைதியாய் உன்மடியில் நானானேன் 
கருவறையும் வெறுக்கின்ற உன்ஆட்சியில் 
எம் வாழ்நாட்கள் செழிப்புறுகிறது


உலகத்து உறவுகளுள் உன்னதமானவள் நீ 
எனக்கென நீ கொள்ளும் ரணங்களால் 
என் குருதிகளை தியாகம் செய்து 
உனக்கென நான் வாழ்கிறேன் 



ஏற்கமுடியாத ஏமாற்றங்களால் 
ஏற்றுக்கொண்ட பிரவுகளில் 
எம் எத்தனையோ ஆசைகள் 
அடகுவைக்கப்பட்டதை எம்மைவிட 
அறிபவர் யாருமி்ல்லை.....


ஆசாபாசங்களின் அடித்தளங்களை 
ஆதரித்த எம் காதலுக்கு பரிட்சையும் 
இயற்கை அனர்த்தங்களுமாய் 
உருவெடுத்த காலம் இதுவாகிவிட்டது 


உலகமே வியந்து நிற்கும் 
எம் காதலின் சக்தியில் 
எம்மை வெறுப்பவர்களும் 
காதலிக்கும் நேரம் கூடிவரும் 


என்னை விட்டு உலகமே அகன்றாலும் 
எம் மரணம் கூட எம்மைப் பிரித்திடாத 
நிலைகொண்ட ஜடமாக உயிர்த்து 
என்னில் உனைக் காண்கிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Without Investment Jobs Available said...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! நன்றி நண்பரே !

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...