இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 21, 2012

அன்னை மடி அரவணைக்குமா??அம்மாவென்றழுத போது 
அரவணைத்த மாதா - உனது 
எறிகணை சொல்லம்பால் 
அகமின்னும் அழுகிறது 


பத்துமாதச் சுமை தீர்த்த - உனது 
எச்சுமையும் எனதாக்கி 
சிரமேற்றுச் சுமந்தவனை 
சிதைத்ததுன் செயல்கள் 
பிணமானேன் உயிரோடு 


இருவருடப்பால் குடித்து 
பலவருடப் பக்குவத்தில் - உனது 
வைராக்கியமும் என்னுள் 
அட்டையாய் ஒட்டியுள்ளதே அம்மா......
சேட்டைகள்தான் பலிக்குமா??
என்தவறு ஏதங்கே.....ஆணென்ன பெண்ணென்ன 
குழந்தைகள் நான்கானால் - உனது 
பாசமதை சமத்துவமாய் 
பங்கிடுவதில் தவறுசெய்து 
சுயநலத்துக் காரணங்கள் ஏனம்மா??


நீயறிந்த பிள்ளைநான்...
என்னுறவுகள் உலகமென்றேன் 
என் ஆசைகளை வெறுத்திருந்தேன் 
உடன் பிறப்புகள் உளம்மகிழ 
உயிர்பிழிந்து உழைத்திருந்தேன் 
எனக்கொரு நன்மை செய்ய 
ஏனவர்கள் வெறுக்கிறார்கள் 


வீண் வேற்றுமை வளர்த்து 
வெறுப்பை வேர்களாக்கி 
அவர்களால் ஆனவர்களையும் 
அடைத்துவைத்து வெஞ்சம் தீர்க்க 
என்ன குற்றம் செய்திருந்தேனோ ??
வேதனைகள் தாங்கலியே....!


இன்றய நிலமைகளோடு 
நாளையை ஒப்பிடுதலும் 
நடந்த நிகழ்வுகளோடு நடைபயின்று 
நிஜங்களை அழிப்பதுவும் 
நிரந்தரமற்ற அனாகரீகங்கள் 


என்னருமைத்தாய் -உனை 
என்வீட்டு மகாராணியாய் 
வைத்து நானும் காக்க வேண்டுமென 
சிறுவயது ஆசையாய் சீராகக் கூறிவந்தேன் 
சீ....யென்றாக்கிவிட்டு 
சிறு எறும்பாய் நசுக்கிவிட்டாய் 


உன்னன்பை நானடைந்து 
பெற்ற கடனை தீர்த்துவிட 
என்ன தவம் செய்ய வென்று 
தாயாய் நீமாறி என்னுயிர் பிரிவதற்குள் 
தூரத்துமடலிலாவது தெரிவித்துவிடு..........!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Anonymous said...

என்னருமை சகோ!
உள்ளத்து வேதனை கவிதையாய், ரத்தக் கண்ணீராய் காட்சி அளித்து, எம்மையும் நின்சோகம் தாங்கி நிற்கின்றதே! கலக்கம் வேண்டாம் எம் உறவுகள் தோள் கொடுக்க இருக்கின்றனர் என்ற நம்பிக்கை கொள் தோழா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...