வருடங்களின் எண்ணிக்கை
வருகையிலும் செல்கயிலும்
கழிந்து செல்லும் வயதுகளாகிறது
விடியாத இரவுகளும்
இருளாத பொழுதுகளுமாய் - பல
கேள்விக்குறிகளோடு வேதனைகள்
ஈழத்தேவையில் ஏங்கும் இனங்களும்
அழிவில் அகப்பட்ட ஏழைகளுமாய் -இன்னும்
ஈடேற்றத்திற்கான ஏக்கங்களோடு
அதிகாரம் கையிலிருந்தும்
அடிமையாய் ஆட்சிசெய்து
இழிவுறும் ஆட்சியாளர்கள்
ஆட்சிமாறும் அரசுகளேனும்
அதிருப்தி நீக்கிடாதோவென்று
நம்பிக்கெடும் வேட்பாளர்கள்
கற்றகல்வியில் பயனற்று
காத்திருப்பில் தொழிலற்று
வாழத்துடிக்கும் பட்டதாரிகள்
வழிகாட்டலின்றிய வாலிபனின்
நிராசையான தேவைகளும்
நிவர்த்திக்கப்படாத வாலிபங்கள்
விலையேற்றம் விண்ணைத்தொட
ஓர் கவளச்சோறு நோக்கி
ஏங்கிநிற்கும் ஏழைகள் நிலை
ஒவ்வொரு வருடமும்
ஓயாதுழைத்து புதுவருடத்திலேனும்
புதுமை வாழ்வு தேடும் உழைப்பாளிகள்
இவ்வாறே பல கேள்விகளை
தாங்கிநின்ற 2011 கடந்து செல்கயில்
துவக்கம் தரும் 2012 நன்மைகளோடு
நல்லதாய் அமைந்திடட்டும்
அனைவருக்கும் புதுவருடத்தின்
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்
1 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா
Post a Comment