அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??
மானத்தின் விளைவிதுவோ
காமத்தின் விளைவிதுவோ
வறுமையின் விளைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..
உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே
சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ
தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்
மிருகம் தன்கன்றுச் சாவில்
தனைமாய்த்துக் குழிதோண்டி
அடக்கம்செய்து அடங்கிவிடுகிறதே
ஆறறிவு மிருகம் உன்னால்
உலகத்துத்தாய்களே தலைகுனிகிறது
சாதாரணமாய் சிசுமரணமின்று
நிவர்த்திக்கப்படாத வாலிபமும்
நிர்க்கதியாகும் பெண்ணியமும்
சிந்திக்கப்படும் சரித்திரமானால்
சமனிலையிங்கு சாத்தியமாகும்
2 comments:
சாதாரணமாய் சிசுமரணமின்று
நிவர்த்திக்கப்படாத வாலிபமும்
நிர்க்கதியாகும் பெண்ணியமும்
சிந்திக்கப்படும் சரித்திரமானால்
சமனிலையிங்கு சாத்தியமாகும்
நல்ல வரிகள் தோழர்..
'
நம் தளத்தில் அடிக்கிறாங்க MY LORD'
"ஆறறிவு மிருகம் உன்னால்
உலகத்துத்தாய்களே தலைகுனிகிறது"
அருமையான வரிகள் நண்பரே!
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
Post a Comment