தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை
இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை
உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தானாய் வளர்ந்ததை மறக்கவில்லை
என்னவனுக்காய் காத்திருந்தமாலை
எதிர்பார்த்திராத செய்திவந்தது
சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில்
சாவின் எல்லைவரை சென்றுவிட்டாரென்றனர்
இருண்டது உலகம் சுற்றியது தலை
நிதானித்துத் தடுமாறி வைத்தியசாலையடைந்தேன்
அவர்நிலைகண்டு மூச்சயானதை மறக்கவில்லை
கண்விழித்துக் கதறியழுதேன்
விதியின் விளையாட்டையும்
என்நிலையின் அஸ்த்தமனத்தையும் எண்ணி
நெஞ்சம் படபடத்து கதறல் அதிகரித்தபோது
சேர்ந்த நண்பர்ளும் சூழ்ந்த நபர்களுமாய் - ஆறுதலாய்
ஏதேதோ சொல்லக் கேட்டதை மறக்கவில்லை
பிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையோடும்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வாக்கில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை
தொடர்வது என்ன???...............காத்திருங்கள்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
3 comments:
தொடர் இது இப்போதுதான் முதல்முறை வாசித்தேன்..தொடர்கிறேன்.
படித்துவிட்டு மனது வலிக்கிறது.
மனதினில் கலக்கத்தினை ஏற்படுத்துமளவிற்கு உள்ளது.
நன்றாக உள்ளது. தொடருங்கள் தொடர்கிறோம்.
தனி மடல் ஒன்று அனுப்பியுள்ளேன்...பாருங்கள் தோழரே!
Post a Comment