இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, November 30, 2011

வாசித்திடு உனக்காக வாசித்திடு

எழுத்துக்களின் கோர்ப்பும்
உமிழும் மொழிச்சலும்
வாசிப்பின் உயிர்நாடியாய்
வாழவைக்கிறது மொழிகளை

தாய்மொழி பிறமொழியென
உலகம் கண்ட மொழிகளின்
அருமையினை ஊமையனிடம்
வினவிப்பார் விக்கியழுவான்

“அ”முதல் “ஃ” வரை படியடாவென்ற
வாத்தியாரின் விரக்தியை
வீணாக்கிய மாணவனிடம்
இன்று கேட்டுப்பார் விரண்டோடுவான்

வாசிக்கத்தெரியாதவன் வாழ்கிறானேயென்று
வீண்வாதம் சொல்கிறவனே கேளவனிடம்
மாற்றானின் வாசிப்பில்தான்
வாழ்கிறேன் என்றுசொல்வான்

சிந்தையுள்ளவனாய் ஊனமற்றவனாய்
உளரல்களோடு மதிமறந்தவனாய்
உணரப்படாத முழுமனிதனாய்
வாசிப்பில் வளர்க்கப்படுகிறாய்

அறிந்து நில் கற்றுச்செல் என்பதை
ஆய்ந்தறிந்திட வாசிப்பற்றவனாய்
ஆராய்ந்திட முடிவதில்லை
ஆழ்ந்து தேடிட வாசிக்கத்துணிந்திடு

எதைத்தான் வாசிப்பதென்று கேட்கிறதுன் மனம்
இறைவழி குர்ஆனை முழுவதுமாக வாசித்திடு
நபிவழி ஹதீஸ்களை முழுவதுமாகப்படித்திடு
உன்னதமனிதனாய் உருவம்பெற்றிடுவாய்

கணணி மயமான உலகிகைக் கற்றிட
வாசிப்பற்று கால்வைத்திட முவதில்லை
கருத்துகளோடும் அவசியத்தோடும்
மொழியறிந்து வாசிக்க வேண்டாமா??

உலகத்துநடப்புகளை பத்திரிகைகள்
உடல்களாய்த்தாங்கிநிற்கிறது ஊர்ந்துபார்
உண்மையறிந்து உணர்ந்து நடந்திடுவாய்
வாசிக்காமல் முடிந்திடுமா இவை

வாசித்தவன் இன்று விண்ணைத்தொட்டான்
விவாதித்தவன் ஏப்பம் விடுகிறான்
வானமும் பூமியும் பரந்துகிடக்கிறது
வாசித்திடு மனிதா உனக்காக வாசித்திடு
அத்தனையிலும் உயர்விருக்கிறது


கடந்த ஆண்டு வாசிப்பு தினத்திற்கா எழுதப்பட்ட கவிதை தேங்கிக்கிடந்தது தூசிதட்டினேன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...