இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, November 20, 2011

நாசமானவன் நாசமாவான்....

மனிதனைப் புனிதனாக்க 
மதங்கள் வரையறுக்கப்பட்டன 
மதங்களை இழிவுபடுத்த 
மனிதனே துணிந்துவிட்டான் 


உன்துணிவில் சாதித்திடாது 
துயரங்களே உன்வழியில் 
விலைகொடுத்துப்பெற்றவனாகி 
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய் 


சாதாரணமாய் குருதியோட்டும் 
சாத்தான்களின் சங்கமமான உலகில் 
சலசலப்புக்கு வழிசெய்து 
சனியனாய் ஏன் உருவாகினாய் 


நீ துவக்கிவிட்ட வழிகள் 
எத்தனை நல் உள்ளங்களின் 
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி 
சின்னாபின்னமான சடலமாவாய் 


நட்புக்கு வழிகோலும் 
முகநூலின் பாதையில் 
கிரிமிநாசினியாய் நீமாறி 
விபரமான முட்டாளாகினாய் 
மதங்களை மோதவிட்டு 
முகமலர்ந்திடத் துணிந்தாய் 
பகுத்தறிவுள்ள புனிதர்களாய் 
உன்முகத்தில் சுறிட்டிவீசி 
காறி உமிழ்ந்ததைப்பார்...


அற்பம் ஒரு படமுருவாக்கி 
அடைந்தது நீ ஏதுமற்றிருந்தாலும் 
அன்பர்களின் மனக்கசப்பிற்கு 
அதிபதியாம் இப்லீசானாய் (சபிக்கப்பட்டவன்)


எம்மதமானவனாலும் நீ 
அம்மதம் நோக்குவதுபோல் 
பிறமதம் கருதாவிடின் 
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய் 


இறைவனின் ஆட்சியில் 
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை 
உன்னைச்சோருவது திண்ணம் 
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும் குறிப்பு : Facebook ல் உலவுகின்ற புகைப்படங்கள் கண்டு மிகவும் கவலையில் உருவான வரிகள் அவற்றை கண்டவுடன் hide/spam செய்து விடுங்கள் ( கஃபாமீது தேவையற்ற உருவங்கள் இருப்பதுபோலவும் ஹனுமான் முன்னர் நிர்வாணப்பெண் இருப்பது பொலவும் இன்னும் பல சகிக்க முடியாத படங்கள் உருவாக்கி உலவவிட்டுள்ளனர் ) நண்பர்கள் அனைவரும் பேஸ்புக்கில் உலவுகின்றீர்கள் இவ்வாறான படங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துவிடாதீர்கள் share பண்ணாதீர்கள் அவற்றால் மேலும் மெருகூட்டப்படுகிறது நன்றி 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

மழை said...

சரிதான்.தகவலுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! அருமையான பதிவு! தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

தமிழ்தோட்டம் said...

உணர்வு பூர்வமான வரிகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...