இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 12, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)வயிற்றுச்சுமை தீருமுன்னே
மனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை

அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை

ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்ததில்
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை


தாயின் பரிதவிப்புடன் சேயும் துடித்தது - என்
தங்கத்தின் உழைச்சலை சாதாரணமாய் கொண்டு
அன்பைக்காத்திட பாசத்தை மறந்து
உண்ணமறுத்த உணவு
விசமாய் வீழ்த்தியதென்குழந்தையை
அறிந்தபோதுதான் அழுதேனதை மறக்கவில்லை

எனக்கெனத்துணைவர என்பிள்ளை
பிறப்பானென்ற கனவும் 
காலம் முழுதும் துணைவர 
கணவனிருக்கிறானென்ற ஆசையும் 
நிராசையாகிக் கலைந்து 
தனிமையானதை மறக்கவில்லை 

எத்தனைநாளழுவது எதற்காக 
அழுவதென்ற வீராப்புடன் 
பிரிந்தவைகளை நினைத்து 
வருந்தியென்ன லாபமென்று 
வருந்தினேனெனை விரைந்து 
போராடத்துணிந்ததை மறக்கவில்லை 

இவளது போராட்டம் தொடரும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! அமர்க்களம்! அட்டகாசம்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

jeyaseelan said...

கண்ணீர் வற்றிப்போன உன் கண்கள்
வறண்டு போன நிலத்திற்கு சமமானது,

ஜெயசீலன்
தமராக்கி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...