பிரிவுகளின் ஆரம்பத்தில்
உருவாகும் வாழ்க்கைப் பாதையில்
பரிவுகளின் தேவைகளும்
உணரப்பட்டு உருமாறுகிறது
அன்பே என்றாகிய ஆதரவுறவு
அன்னம் மறந்து அன்பனின் நினைவில்
அவன் உலவிய நிழல்களோடு
உறவாடிக் காத்திருக்கிறாள்
விக்கித்த நினைவுகளை மறக்க முடியாமல்
விதியின் சுமையில் கனத்த வலிகளை
இறக்கி வைத்திட வழிதேடி
போராட்டத்துடன் பொழுதுபோக்கிறான்
குளிரின் நடுக்கமும் சூட்டின் புழுக்கமும்
உணரும் போதெல்லாம் உயிர்பிரிய
உறவானவனின் இறுக்கத்தின் ஏக்கத்தை
ஒவ்வொரு நொடியும் உணர்கிறாள்
தனிமையென்றானதும் வெறுமையகற்ற
நண்பனின் துணையும் திரையின் நீளமும்
உள்வாங்கப்படும் நிலையில் ஓரளவு நிம்மதியோடு
அதிகளவு சிரத்தையுடன் உழைக்கிறான்
திரும்பும் திசைகளெல்லாம்
அவனின் குரல்கேட்க
காற்றின் அசைவுகளையும்
அவனின் முச்சாக்கி
காதலோடு மட்டும் காத்திருக்கிறாள்
வேதனைகளை விழுதுகளாக்கி
வெதும்பும் மனதுக்குத் துணைநாடி
திசைமாறிய வாழ்வோடு
குடியும் கும்மாளமும் குட்டியும் கூத்துமாய்
துரோகத்தை அங்கு அரங்கேற்றுகிறான்
அழகிய மலர் சேற்றில் விழுந்ததுபோல்
தொலைந்த வாழ்வு தேடியலைகின்ற
இருதுருவங்களாகி காதலின் துரோகிகளாய்
வெண்ணீர் ஊற்றிக்கொண்ட
தேகங்களாகின்றதே எதனாலிது....
3 comments:
அருமை
கலக்கல் சார்!
பகிர்விற்கு நன்றி!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
த.ம. 1
Post a Comment