இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, November 23, 2010

பணமென்ற பேயுனக்கு....


எதையும் வெல்லும் ஆற்றலுனக்கு
உனக்காக ஏங்கும் மனங்களுண்டு
உன்னால் கண்ட துயர்களுண்டு
உனக்காக மூண்ட போர்களுண்டு


பணமென்ற காகிதமே
உன்சக்திக்கு நிகர் நீயேதான்
உன்னை அடைந்ததை விட
இழந்தவைகளிதிகமே...பங்கம் ஏற்படுத்தும் பணமே
நீயற்ற காலமொன்று உதிக்காதா?
நொந்தழும் மனங்களுக்கு
விடிவு ஒன்றும் கிடைக்காதா?


உன்னாட்சி பாதாளமட்டும்
உன்னால் வீழ்ச்சியும் பாதாளத்திலே..
உறவுகளுக்கு பிரிவு கொடுத்து
தனிமையில் தவிக்க விடுகிறாய்...


பணமென்ற பேயுனக்கு
அடிமை கொண்ட மனதினையும்
குணமென்ற நட்பண்பில்
வெல்பவரும் உனை வெல்கின்றனர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...