இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, May 3, 2010

கோப அரக்கனின் ஆட்சி


பஞ்சு உள்ளம் படைத்த
அருமை நன்பனின்
சீறல் நிலை காண
துடித்தது என்னுள்ளம்

கோபம் எனும் வெறியன்
உனையாளலில்
உனை மறக்கும் நீ
அவன் தாண்டவத்தில்
அப்படியே ஆடுகிறாய்

அவன் கொண்ட செயலால்
உன் துணை என்றும்
தோழன் என்றும்
உறவென்றும் உடலென்றும்
உன்னோடு கலந்தவை
கலங்கிடச் செய்கிறாய்..

சினம் எனும்
இவ்வரக்கனின்
கொடுமையில்
சீர் குலைந்த சீலர்கள்
பல கோடி....

இவனை ஆழத்தெரிந்த
ஆட்சியில்தான்
அன்பு எனும்
சிம்மாசனத்தில்
வீற்றிருப்பாய்
என் தோழா...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

rifas said...

super haseem

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...