இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 2, 2010

மருமகளுக்கோர் தூது


தாயின் சுமை தீர்க்க
தந்தையின் மனம் குளிர
ஆவலாய் எதிர்பார்த்த
அழகு மயிலாள்
அன்னை மடியில்
எந்தன்மருமகளாள்
வந்துதித்தாள் ........


மருமகளே உனைக்காண
அருகதை அற்ற
உந்தன் மாமன்
உன் தந்தையுடன்
மட்டிலா மகிழ்ச்சியுடன்
வெகு தொலைவில்
இருந்தாலும் உனை வாழ்த்த
தூதுவிடும் ஓலையிது ....


இவ் வைகரையின்
ஐம் பூதங்களும்
உனை வாழ்த்தி வரவேற்க
உறவுகளின் மலர்ச்சியில்
இன்றுதான் உதிர்ந்து விட
செய்திமட்டும் காதுகடிக்க
உள்ளம் கொண்ட
களிப்பை சொல்ல
வரிகளில்லை மகளே


இன்று நீயும் பிறந்ததால்
இன்நாளும் சிறக்க
அழகாய் பிறந்த நீ
அகிலம்போற்ற
சகலமும்பெற்று
சுகமாய் வாழ
வல்லோனை மட்டும்
வாஞ்சையுடன்
வேண்டுகிறேன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

rifas said...

super nanpaa un kavithai ennai meimarakka seikintrathu

Mufeesahida said...

உங்களுக்கு உங்களுடைய மருமகளுக்கும் எனது வாழ்த்துக்கள் சீக்கிரம் உங்கள் கவலை தீர உங்கள் மருமகளை பார்ப்பீர்கள் அருமையாக அதனை கவி வரிகளில் படைத்துள்ளீர்கள் அருமை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...