இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 25, 2010

ரணத்தில் தொலைந்த வாழ்வு
ஏங்கி ஏங்கி ஏக்கம்கொண்டு
நோக்கி நோக்கி நொந்தழுது
பார்த்துப் பார்த்து பரிதவித்து
பொழுதுகள் மட்டும் விடிந்தது

வருகிறாய் என்று
ஒரு வரிகேட்டதில்
சிலிர்த்த மெய் சில்லென்றானது
அனுபவ வலிகள் மறந்து
தரிசன நிமிடம் கற்பனையானது

என் உள்ளத்தின் கள்வன்
கதிகலங்கச்செய்தவன்
ஸ்பரிச உணர்ச்சிக்கு
உயிர்தந்தணைத்தவன்

உருப்பெற்ற வாழ்விக்கு
உருவம் அமைத்தவன்
வந்தால் மட்டும் போதுமே
என்றெண்ணிய அந்த நிமிடம்

இறைவன் வகுத்த
ரணத்தின் நிகழ்வி்ல்
உன்வாழ்வும் தீர்ந்திட
அத்தனை சோகமும்
மொத்தமாய் மாறி
அழுகை மட்டும் வாழ்வாகி
மறுத்த உணர்வுகளை
இறுக்க நினைக்கிறேன்
சுமையான சோகங்களுடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

K.NEROJE said...

இந்த விபத்து என் நெஞ்சை உலுக்கிய ஒரு சம்பவம்.. இனியும் இவ்வாறு நடக்க கூடாது என கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். எளிய முறையில் மனதை உருக்கும் வரிகள்.. மிகவும் ரசித்தேன்.. பாரட்டுக்கள் நண்பரே...!

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி சகோதரி

தஞ்சை.வாசன் said...

சோகங்கள் எங்களையும் தாக்கும் வகையிலான அற்புதமான வரி(லி)யில் ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...