இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, April 12, 2011

உரிமையுடன் உன்னிடம்......

என்னிதயம் கவர்ந்த
எளிமையானவளே -  உன் 
இதயம் நிறைந்தவனின் 
உரிமையான வினவல்கள் 

அன்பின் திருவுருவமாக்கி 
அன்னையின் சிம்மாசனத்தில் 
அமரச்செய்து அழகுபார்த்ததில் 
உன் பாசம் முழுதும் எனைச்சேருமா?

அழகின் அலங்காரமே - உன் 
நடையுடை நளினங்களும் 
கவர்ந்திழுக்கும் வசீகரமும் 
எனக்கே எனக்காகுமா??

உறவுகளில் உன்னதமானவளே 
சொந்தங்களின் உறவுகள் 
சமர்ப்பணம் உன்னிடமே
சொந்தங்கள் அத்தனையும் - என் 
மரணம்வரை கூட வருமா ???

என்னிதயத்தின் சொத்தானவளே - உனை
செல்வங்களின் அதிபதியாக்கியதில்
ஆழுமையின் நேர்த்தியில் - எனை 
சுவர்க்கம் சேர்த்திடுவாயா????

என் உயிரில் கலந்தவளே - என்
உணர்வுகளுக்கு உயிர்கொடுப்பவளே...
இவ்வுலகில் உலவுகின்ற எம்பயணம் 
உயிர்பிரியும் வரை தொடர்ந்திடுமா ?????

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

அருமையான கவிதை ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...