இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 20, 2011

ஊனக் காதல்...


உவமானங்கள் தேடியலைந்தேன் 
என் காதலையும் உணர்த்திட 
உனைக்கண்ட மாத்திரத்தில் 
மொழிகள் மறந்த ஊமையாகிறேன் 

காதுகளுக்குக் கேட்காத ஒலிகளோடு 
உன்வார்த்தைகளை மட்டும் 
இனிமையான இசைகளாயொப்பிட்டு 
தினமும் ஒலிக்கக் கேட்கிறேன் 

கண்களைத் திறக்க மறந்து 
இருள்மயமான உலகமாகி 
பசுமையான கற்பனைகள் மாத்திரம் 
இன்பமயமான வாழ்கையாகிறது 


அன்பே உனை நாடிவர
கால்களேன் தடுமாறுகிறது 
உனக்குத் தூதுவிட கைகளேன் 
எழுத மறுக்கிறது....

மனதின் வலிமையோடு 
இயற்கையில் மலர்ந்த 
என் காதல்மட்டுமேன் 
இத்தனை ரணங்களோடு ஊனமாகிறது 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

அர்த்தமுள்ள கவிதை...
ம்.. சூப்பர்..

சசிகுமார் said...

கவிதை அருமை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...