இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 27, 2011

அன்பை விற்றிடா தாய்மை


ஏனம்மா அழுகின்றாய் 
எதற்காக நோகின்றாய்
ஈன்ற குழந்தையினை 
ஏனிப்படி பிரித்தார்களென்றா??

பத்துமாதம் பத்திரமாய்க்காத்து 
பகலிரவாய் பத்தியமும் இருந்து 
ஆசையாய் ஈன்றவனை 
ஆசைதீர முகருமுன்  
ஆழிப்பேரலையாய் வந்து 
அள்ளிச்சென்றனரென்றா??
(அழுகின்றாய்)
அம்மாவென்ற குரல்கேட்டு 
ஆரத்தழுவியணைத்து 
முத்தம் பதித்துப் பாலும் தந்து 
முழுமையாய்க் காத்திட 
மறுத்துவிட்டார்களென்றா ??
(அழுகின்றாய்)

காசுக்கு விலைபோன உலகென்று 
காகிதத்தைக் குமித்துவிட்டு  
மனச்சுமையும் உடல்சுமையும் 
நீங்குமுன்னரே... முனைந்து
நீக்கிவிட்டனரென்றா??
(அழுகின்றாய்)

எத்தனை அத்தாட்சிகளோடு 
எழுதப்பட்ட உறுதிகளாயினும் 
விலைமதிப்பற்ற (தாய்ப்)பாசத்திற்கு 
விலைபோனதை நினைத்தா??
(அழுகின்றாய்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...