இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, February 6, 2017

ஆண்மையின் தாய்மை

இன்பத்தின் மிச்சமொன்று  
தாய்மைக்கு வித்திட்டதென்றுணரந்து 
ஈண்றவள்போல் இறுமாப்புடன்  
பிறந்த பயனென்றுனர்வான் 

அகமகிழ்வின் ஆரவாரத்தில் 
அன்னைபோல் அவளைக்காக்க
அல்லும் பகலும் அரவணைத்து 
அன்பின்குறை அகற்றி நிற்பான் 


எடுத்த வாந்தியைக் கையிலேந்தி 
மயக்கமென்றவளை மார்பில் சாய்த்து
மென்மையாய் மெத்தையிட்டு 
மிதமிஞ்சும் சுகங்கள் அளித்திடுவான்   

மஞ்சலரைத்துத் தண்ணியிறைத்து 
காரக் குழம்புடன் கனிவாய் ஊட்டி 
தாய்க்கும் சேய்க்குமென முத்தமாலை 
தினமும் மொத்தமாய்ச் சூடிடுவான்  

ஆறுமாதம் கழிந்தபோது 
மாற்றங்களில் மகிழ்ந்திருந்தாலும் 
அவதியுறும் நிலைகள்கண்டு 
அழுது தொழுதிடுவான் (இறைவனை) 

அறிவு சார் உரைகளும் 
அழகு சார் பேணுதல்களென
குழந்தைக்கென்றொரு அத்தியாயம் 
திறப்பது கண்டு மகிழ்ந்திடுவான்  

பிரசவ வேதனையில் 
பிரசவிப்பான் தனை மறந்து 
இருவரும் நலமெனக் கண்டு 
ஒரு மனதாய்க் கையிலேந்திடுவான் 

பெண் காணும் வலியை மிஞ்சிடுமளவு 
தான் கண்ட வலியகன்ற உணர்வுடன் 
தற்பெருமையும் அவன்கொண்டு  
ஈந்தளித்து மகிழ்ந்திடுவான் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...