இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, February 12, 2017

மாற்றம் நோக்கி ஒன்று படுவோம்..........

அஸ்ஸலாமு அலைக்கும் எனதன்புச்  சகோதரங்களே.....

எம் சமுகத்தவர்களின் நிலைகண்டு வெட்கித்தவனாக சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் விழைந்திருக்கின்ற வெகுமானங்கிளின் அசிங்கங்களை துடைத்தெறிந்திட வக்கத்தவனாக வெம்பி அழுகின்ற மனதுடன் ஆதங்கத்தினை அனைவரின் முன் நிறுத்திட விளைகிறேன். 

பல்லாயிரம் கேள்விகளடங்கிய எம் சமுகத்தின் எதிர்காலம் என்னவாக அமையப்போகின்றது என்ற பயம் அனைத்து சமுகப்பற்றாளர்களையும் தொற்றிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் விடைகளை எங்கு தேடுவது என்ற பொறுப்புகளோடு கைசேதப்பட்டவர்களாக அவஷ்தைப்படுகின்ற நிலையினைக் காண்கிறோம் 

உணர்வுகளால் உருவாக்கப்பட்ட எம் சமுகத்திற்கான கட்சியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உச்சம் தொட்டு உன்னத நிலையினை அடைந்த முஸ்லிம் காங்கிரஸ் என்னும் பாரிய சக்தியை அழித்திடவும் அசைத்திடவும் பல்வேறு கோணங்களில் முயற்சித்தவர்கள் முட்டி மோதி மூக்குடைந்து வேறு வழியின்றி தலைவரை நோக்கி வசைபாடவும் வம்பிழுக்கவும் ஆரம்பித்து இன்று மிகக் கீழ்த்தரமான நிலையினை அடைந்திருக்கிறார்கள் பக்கம்பக்கமாக எழுதவும் ஆரம்பித்துவிட்டார்கள்
இதன் முடிவும் இறுதி அத்தியாயமும் அவர்கள் செல்ல இருக்கும்  ஈருலக நரகலோகம் என்பதை மறந்தவர்களாக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து செயல்படுகிறார்கள் என்பது மிக வேதனையான விடயம் 

ஒன்று மட்டும் நிச்சயம் எம் முஸ்லிம் காங்கிரஸ் என்பது மறைந்த எம் பெருந்தலைவர் இட்ட அத்திவாரம் அவர் செய்ததெல்லாம் மக்களின் உணர்வுகளை சமுகப்பற்றாக்கி குருதிகளில் ஓடச்செய்திருக்கிறார் அவர் மரணித்தும் வாழும் இந்தக் கட்சி யார் இருந்தாலும் மறைந்தாலும் எம் சமுகத்திற்காய் ஓங்கி நிற்கும் என்பது ஒவ்வொரு உணர்வாளனும் ஏந்தி நிற்கின்ற வேதவாக்கியம் அற்ப சொற்ப  இலாபங்களுக்காய் படோபகார வாழ்வுக்காய் சமுகத்தை விற்பவர்களால் இதனை அழித்துவிட முடியாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் 

தற்போதய தலைமை மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் மேலோங்கி அவர் மீது சேறு பூசல்கள் தசாப்தங்களாக நடந்து வருகிறது தற்காலத்தில் சமுக வலையத்தளங்கள் அதிகரித்த நிலையில் தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்கார்கள் என்ற நிலை உருவாகி ஆளாளுக்கு அவரவர்களின் பாணியில் பல்வேறு அசிங்கங்களை அரங்கேற்றிய வண்ணமிருக்கிறார்கள் இவர்களால் சொல்லப்படுகின்ற குற்றங்களை அவர்  செய்தாரா இல்லையா என்று ஆராயுமுன் ஒரு சமுகத்தின் பெரும்பாலானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவரைத்  தூற்றுவதன் மூலம் அந்த சமுகத்தையே அவமதிக்கிறோம் என்ற குற்ற உணர்வற்ற எம் சமுகத்தவர்களின்  மத்தியில் வாழ்கிறோமென்று வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது எம் மார்க்கத்தின் குற்றவியலின் சட்டதிட்டங்களைத் தாண்டிய இவர்களின் செயல்பாடுகளின் நோக்கம்தான் என்ன?? இதனால் சாதிக்கத் துணிவது என்ன? எம் சமுகத்தின் ஒழுக்கச் சீர்கேடு அல்லாது வேறென்ன ஒவ்வொருத்தரின் மானத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு மற்றவர்களின் கையில் ஒப்படைக்கட்டிருக்கிறது 
சிந்தித்து செயல்படுங்கள்  சகோதரர்களே 

மாற்றம் வேண்டுமென்றால் அது எவ்வாறான மாற்றம் என்பதை முதலில் உணருங்கள். ஒன்றுபட்டால் சாதிக்க முடியாதவை எதுவுமில்லை அடிப்படையில் நாம் ஒற்றுமைப்பட்டவர்களாக மாறவேண்டும். அனைவருக்கும் தலைமைப்பதவி வேண்டும், அனைவரும் ஆட்சியாளர்களாக மாறவேண்டும். அப்போதுதான் அனைத்துவித சுகபோகங்களையும் அனுபவிக்கலாம் என்ற தோரணையில் பிரிந்து நிற்பதை விட்டும் ஒன்று பட வேண்டும்.  நாம் ஒரே சமுகம் ஒரே கொள்கையில் வாழ்பவர்கள் என்பதை முதலில் செயல்மூலம் உறுதி செய்யவேண்டும். ஏதாவது ஒரு முஸ்லிம் கட்சியாக மாறவேண்டும். அதன்பின்னர்தான் எமக்கான தலைமையை தீர்மானிக்கலாம் எதிர்கால சந்ததிக்கான இருப்புகளை வரைந்தெடுக்கலாம். சமகாலத்தில்  
ஒற்றுமை நோக்கிய எழுத்தாளர்களையோ அரசியல் வாதிகளையோ காண முடியாதுள்ளது  அதை முதலில்  அடையாங்காணுங்கள்.  அதன்பால் அனைவரும் அணிதிரளுங்கள்.  இது நடந்தேறுமானால் எமது நீதி மன்றில்   முன்வைக்கப்படுகின்ற  குற்றங்களுக்கு தீர்வினை நாமே வழங்கிட ஆவணை செய்திடலாம் இவ்வாறான சிந்தனைகளுடன் எழுதுங்கள்  முன்வாருங்கள் சகோதரர்களே.....


இது வரை காலமும் வெறும் அடிப்படை உணர்வாளனாக மாத்திரம் பயணிக்கின்ற என்னைப்போன்ற பல்லாயிரம் உறவுகளின் வாயிலாக மன்றாடிக்கேட்கின்றேன் தயவு செய்து அசிங்கங்களை அரங்கேற்றாதீர்கள் எம் பல்லை மற்றவர்களுக்கு முகரக்கொடுக்காதீர்கள் துப்பரவு செய்யும் பொறுப்பு எம்மிடம் கொடுக்கபட்டிருக்கிறது அதற்கான வழி இதுவல்ல தயவு செய்து நிறுத்துங்கள் 

இந்த எழுத்தின் வாயிலாக எவர் மனதையும் புண்படுத்த நான்  நாடவில்லை உண்மையான சமுகப் பற்றை நோக்கமாக்க கருதுதினேன்  மிகவும் வேதனைப்படுகிறோம் பல்வேறு விதமான அபாண்டமான   எழுத்துகளைக்கண்டு மறுப்பெழுத நாடி தவிர்ந்திருக்கிறோம் காரணம் அவைகள் விவாதங்காளானால் கூத்தாடிகளுக்கு குதூகலமாகிவிடும் எமக்குள் அது வேண்டாம்.   ஆதாரம் அணுமானம் எதுவாக இருந்தாலும் இறைவனின் சன்னிதானத்தில் அவர்களும் நாமும் நாளை விசாரிக்கப்பட இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்  அற்பான இந்த வாழ்நாளில் நாம் சாத்தித்தும் தேடிக்கொண்டதும் மறுமைக்கான நற்கருமங்களாக மட்டும் அமையட்டும்  தயவு செய்து சிந்தியுங்கள் 

மிக்க நன்றி சகோதரங்களே.........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...