இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, March 6, 2017

அல்லாஹ்வுக்காய் ஒன்றுபடுங்கள்


போராளியாய் பிறந்த நீ
போராளியாய் மரணிக்க வேண்டும்
புகளெதுவும் உனைச் சேராது
ஆசைப்பட்டு அழிந்திடாதே......
என்றுரைக்கும் அரசியலின்று

தலைவனின் பிழைகூறும் தொண்டனும்
தொண்டனின் குரல் நசுக்கும் தலைவனுமாகி 
வேடமுற்றோரின் கூப்பாடுகளும்
வேதம் உரைக்கும் வேதாந்திகளுமென
அனாகரீக அரசியற் காலமின்று

கூஜாத் தூக்கிகளின் பன்னீரிலும்
காக்கா மார்களின் கதையிலும்
மயங்கி மதிமறந்த மேதாவிகள்
எதிர்காலம் பற்றிய கவலையின்றி
மானம் வித்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்

ஒரே அல்லாஹ் ஒரே றசூலென
ஒரு கலிமாவை உரைத்த சமுகம்
சாத்தானிய அரசியலுக்காய்
சின்னாபின்னமாகிச் சிதறப்போகிறது
சீர்படுத்த முனைவாரில்லையின்று

அறையிலுள்ள அசிங்கங்கள்
அம்பலமாகி நாறிக்கொண்டிருக்கிறது
அறையினுள் துப்பரவு செய்ய
எவர் மனமும் நாடவில்லை
மரணித்துப்போன மனங்களுடைய
பிணங்களுடனா எம்பயணங்களின்று 

மாற்றும் சக்தியாய்த் தலைநிமிர்ந்து
ஒற்றுமையின் பலமென்ற பேயரெடுத்து
ஒன்று பட்டு உருமாற்றிய 
பெருமை கொண்ட சமுகம் நாம் 
புகள் மங்கி புழுதி படிகிறதின்று 

எம் சமுகத்தின் நிலைகண்டு
அழுகின்ற உள்ளங்களுக்கு
ஆறுதல்சொல்ல நாதியில்லை
செல்லும் வழிதேடியலைகிறாரகள்
கொண்டு சேர்க்க யாருமில்லையின்று 

இந்த நிலைதொடர்ந்திட்டால் 
எம் சமுகநிலை என்னவாகும் 
தோல்விகள் எமக்காகி 
அடிமைகளும் நாமாகி 
எதிர்காலம் இருளாகுமே 
சிந்திக்க மாட்டீர்களாயின்று 

அரங்கேறும் அசிங்களின் மத்தியில் 
அசையாத வீற்றிருப்புடன் 
பதவிக்கு அடிமைப்பட்டு 
பரிதாபம் உனக்கேன் தலைவா 
ஒற்றுமைப்படுத்த வழிசொல்வாயாயின்று 

நீ காட்டியது வேதமென்று 
கண்ணடைத்துக் காத்திருந்தோம் 
இன்னும் உன் மொழியில் கேட்க 
எதிர்பார்த்திருக்கிறோம் 
நிரூபணமுண்டா உன்னிடம் 
நாளைபற்றிய கவலையுடன் 
இன்னும் தொடர்கிறோமின்று 

கடந்துவிட்ட எங்கள் ஆயுள் 
வெறும் போராளியாய்த்தான். 
கண்ணீர் சிந்துகிறது 
வேண்டிநின்ற ஒற்றுமை கலைத்து 
சீண்டியெங்களைச் சிதறடித்து 
வெறுங்கையுடன் மரணிக்கச்செய்திடாதீர்கள்......

பெருமானார் காட்டிய வழியில் 
பெருவெள்ளமாய் ஒன்றுதிரள
ஆட்சியானாலும் அவமானங்களானாலும் 
ஆசைகளானாலும் சொகுசுகளானாலும் 
அனைத்தையும் திறந்து 
சமுக நலம் என்று மட்டும் நோக்கி 
அல்லாஹ்வுக்காய் ஒன்று படுங்கள் 

சலித்துப்போன மனங்கள் - இன்று 
உங்கள் சாகசங்களை ஏற்க மறுக்கிறது 
பிழைகளைத் தூக்கிவைத்துவிட்டு 
சரிகளை மட்டும் கருதி 
கோசங்களாய் வைக்கப்படுகிறது 
செவிடர்களாய் உறங்காதீர்கள் 
நாளைய வெற்றிக்காய் 
இன்றே விழித்தெழுங்கள் 
அன்றேல் வீழ்வது நிச்சயமாகிவிடும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அற்புத வரிகள் இனியாவது விழித்தெழுவோம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

mohamed althaf said...

அருமை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...