இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, March 14, 2017

எனதன்பு இளைஞனே.....


விளையாட்டோடு வீணாகும் 
வீரனே உம் விளையாட்டால் 
வாழ்வின் விளையாட்டை 
வென்று நீ காட்ட வேண்டாமா ?? 

வேலையில்லாச் சோம்பலோடு 
வேலைதேடி நீ வெந்து போகிறாய் 
வேலையொன்று உருவாக்கிட 
வழியொன்று நீ தேட வேண்டாமா??

படித்தவன் நானென்று 
படிப்புடன் பதவி தேடுகிறாய் 
நீ கற்றது உதவாக் கல்வியென்று 
உணர்ந்து கொள்ள வேண்டாமா??

உன்னைச் சுற்றி உற்றுப்பார் 
மாணிக்கங்களாய் வழிகளிருக்கிறது 
வாலிபம் என்னும் வைரமிருக்கிறது 
நம்பிக்கையை ஆயுதமாக்கி....
முனைந்து நீ முன்னேற வேண்டாமா??

வழியொன்று பிறக்குமென்று 
வழியற்றுக் காத்திருந்து 
வாழ்விழந்த ஏழையாகி 
வதைக்கப்படுகிறாய் வறியவனாய் 
சாதித்தவனாய் மாற வேண்டாமா??

கன்னியுன் பருவத்துக் காதலை
காளையென்ற மமதையுடன் 
காமத்தால் சீரழிந்து சிதைந்து போகிறாய் 
காதலை நீ வெல்ல காதலிக்க வேண்டாமா??

இன்றய முயற்சியின் பயன்பெற்ற 
நாளைய சமுகத்தலைவன் நீயாவாய் 
இன்று நீ உன்னை இளந்துவிட்டு 
நாளை உன்னை நீ தேடுவாய்.......

எனதன்பு இளைஞனே.....
மாற்றானிடம் கையேந்திய 
மடிப்பிச்சை வேண்டாமுனக்கு 
உனக்கெனப் பாதைவகுத்து 
முன்னேறத் துணிந்து நில்
முழு மதியாய் மகிழ்வாயென்றும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...