இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, June 28, 2012

நிரந்தரமாய் இடங்கொடு.......!!!சுதந்திரம் கண்ட நாட்டை 
சுடுகாடாய் மாற்றியதில் 
எஞ்சியது ஆறடி நிலம் 
அதிலுமா கூறுவேண்டுமுனக்கு 


எங்கள் நாடென்று 
எண்ணி உள்ளோரையும் 
ஏய்த்துப் பிழைக்க நினைத்த
ஏழனப்பாவியாய் நீங்கள் 


பிறந்த மண்ணைக் குறிவைத்து 
பிறந்த போதே கழுத்தறுத்து 
நிம்மதியற்ற வாழ்வளித்து 
நிறுவயதுதானென்ன....??


அப்பாவி என்று கண்டால் 
ஆதரவு தரமறுத்து 
அனியாயத்தால் அடிமேலடிக்கின்ற
அரக்கர்களாய் நீங்கள் 


தடுக்கி வீழந்தவனை 
தூக்கிவிட நாதியற்று 
தலையில் மிதிக்கின்ற 
கொடுங்கோல் அரசர்களாய் நீங்கள் 


நிரந்தரமற்ற வாழ்வில் 
நிலைப்பவை ஏதுமில்லை 
நிம்மதியாய் வாழ்ந்துமடிய 
நிரந்தரமாய் இடங்கொடுத்திடுங்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Related Posts Plugin for WordPress, Blogger...