இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, July 1, 2012

உனக்கென உதிர்ந்த வரிகள்


ஒவ்வொரு வருடமும்
ஓயாது உணர்த்திடும்
உன் மலர்வு நாளை
மகிழ்வோடு கடந்திடப்
போராடுகிறது மனம்


ஏக்கம்தான் வாழ்வாவென
எண்ணத்தோன்றுகிறது
ஏனிந்த ஏமாற்றங்களென
எய்த்து நிற்கிறது மனம்


அத்தனை தந்தைக்கும்
அகம் நிறைத்திடும் செல்வம்
அன்னையாய் மலர்ந்திட்ட
அருமை மகளின் நிகள்வல்லவா


தாய், தாரம் கடந்த பாசம்
தங்க மகளின் திகட்டாத நேசம்
தரணியை வென்ற தற்பெருமை
தளரந்திடா வாழ்விற்கு
(இறைவனை) வேண்டுகிறது மனம்மகளே என நான் மகிழ்ந்த போது
மகனே என்றழைத்து
மகிழும் உனைக் கண்டு
பூரிப்பில் விக்கிநிற்கிறேன்


ஒவ்வொரு பிறப்பிலும்
மகிழ்கின்றன மனங்கள்
உன் மலர்வில் இணையற்ற மகிழ்வை
அடைந்ததென்னுள்ளம்


கண்ணான என் கண்மணியே
இனியடையும் காலத்தினை
பொன்னானதாய் மாற்றி
கற்றலோடும் கண்ணியத்தோடும்
உலகையும் உறவுகளையும் அடைந்து
உன் வழியில் வெற்றிகளை
நிர்ணயித்துக்கொள் தனித்துவமான
உன்னை நீ உணர்ந்து
முயற்சிகளோடு முன்னேற்றம் கண்டு
ஈருலக வெற்றியை உனதாக்கிக்கொள்
உமக்கான என்பிரார்த்தனை என்றும்
உன் பாதையில் வரைந்துநிற்கிறேன்
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன் நண்பரே ! நன்றி !

Seeni said...

maash allaah!

unmaiyil Arumai!

haseem hafe said...

மிக்க நன்றி தோழர்களே....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...