இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, October 19, 2011

காத்திருப்பின் வெகுமதி...


கண்களுனைத் தேடுகிறது 
காத்திருக்கிறேன் கானகத்தில் 
காதல் எனக்களித்து 
தவிப்பை பரிசளித்தாய் 


உனக்காகக் காத்திருக்கும் 
ஒரு நிமிடத்தவிப்புக்கூட 
தசாப்தங்களாய்த் தெரிகிறதே 
காதலின் தெய்வீகமிதுவோ...


மரங்களும் பட்சிகளுமாய் 
ஏளனப்பார்வையில் எம் காதலை 
குற்றம் சொல்கிறார்கள் 
என்னுள்ளம் பரிதவிக்கிறது தன்னந் தனிமையில் நின்று 
கால்கடுக்க எதிர்பார்த்திருந்து 
என் சொத்தாகிய நீயின்றி 
காதலில் ஏழ்மையாகிறேன் 


தவிக்கவிட்டு மறைந்து வந்து 
ஆரத்தழுவி முத்தமிடுவாயே 
அந்த இன்ப அதிர்வில் 
எனையே மறந்து விடுகிறேன் 
காத்திருப்பும் மறைந்துவிடுகிறது 


இப்போதெல்லாம் இத்தனிமையைக் 
காதலிக்கிறேன் ஏனென்றால் 
காதல் தரும் தவிப்பிலுள்ளசுகம் 
காத்திருப்பின் வெகுமதியாகிறது 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Anonymous said...

தவிக்கவிட்டு மறைந்து வந்து
ஆரத்தழுவி முத்தமிடுவாயே
அந்த இன்ப அதிர்வில்
எனையே மறந்து விடுகிறேன்
காத்திருப்பும் மறைந்துவிடுகிறது
#அருமையானதும் உண்மையுமான வரிகள்.
தோனியும் நடிகராகின்றார்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...