பேறுகளனைத்தும் எனக்கே சொந்தம்
குறையதிகம் கண்டாலும் - நான்
சொன்னபடி நீ கேள்....
என்னாசை தீர்ந்திடனும்
என்விருப்பம் நடந்திடனும்
உனக்காக அத்தனையுமென்று - பிள்ளையிடம்
பறித்தெடுக்கும் சுதந்திரங்கள்
உனக்கென்றொரு மனமில்லை
அதிலொரு காதல் உதிப்பதில்லை
அகந்தை மனம் அழுக்கானாலும் - விரல்
நீட்டிய பெண்ணை மணந்திடனும்
வாலிபமுனை கடந்தாலும்
வயோதிபமுனை அடைந்தாலும்
என்தேவை பூர்த்தி செய்து
உன்தேவை நாடிடனும்
காண்பவைகளில் குறைகண்டு
கருத்துகளை சுமத்திநின்று
சந்தேகப் பார்வையில்
சரிசெய்வதாய் நினைக்கின்றீர்
தான் கடந்த பாதை மறந்து
பிள்ளையுள்ளம் மதித்திடனும்
தவறுகண்டு திருத்துதலோடு
சுதந்திரமாய் விட்டுடனும்
பெற்றோர் உம் பார்வையில் தவறுணராது
பிள்ளையின் பார்வையில் சரிகண்டிடனும்
இன்று சரிகாணப்பட்ட தவறுகளும்
நாளைய சரித்திரங்களாகும்
4 comments:
நல்ல கவிதை.....
தொடர்ந்து எழுதுங்கள்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
எங்களின் சில சமூகக் கட்டுப்பாடுகள் இப்படியே பிள்ளைகளின் மனங்களை ஆக்கிரமிக்கின்றன்.ஆனால் சில பெற்றோர்களின் மனநிலை இப்போ மாறிவருகிறது !
சிறந்த கவிதை... நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..
மாறனும் .. வாழ்த்துக்கள்
Post a Comment