இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, October 21, 2011

முனாஸ் என்ற என்தோழனுக்கு.....


முத்தொன்று கண்டெடுத்தால்
முத்துக்குப் பெருமை இம்முத்தினை
இன்றெடுத்த பெற்றோருக்குப் பெருமை
சொத்தான திலகமே நீ வாழீர் 


துடிப்பான மாணவனாய் 
சிறந்த சாரணணனாய் 
கற்றதை கற்றவாறு 
கற்றுத் தேர்ந்த கல்விமானே நீ வாழீர் 


குடும்பச்சுமையும் தானுணர்ந்து 
தன்னலம் கருதிடாது சகாக்கள் துணையுடன் 
சரிந்திடாத குடும்பத்திற்காய் 
இரவுபகல் உழைத்திருந்தவனே நீ வாழீர் 


சமுக அக்கறை வாழும்போதே கொண்டிருந்தாய் 
பிணைந்திருந்த வேற்றுமைகளை 
களைந்திடவும் துடித்து நின்றாய் 
ஏழை நிலையுணர்ந்து மனதினால் அழுதிருந்தாய் 
வசயதியற்ற வள்ளலாய் இருந்தவனே நீ வாழீர் பண்பான உன் குணத்திற்குப் 
பாத்திரமான துணையுடன்- உன் 
சித்திரங்களின் மகிழ்ச்சியில்
சுவனம் காண்கின்றவனே நீ வாழீர் மக்கள்மீது நீ கொண்ட பற்றில் - அவர்
மனங்களில் மாணிக்கமாய் ஜொலித்திருந்தாய் 
வெகுமதியாய் அவர்களின் பிரதிநிதியாக்கியதில் 
இன்றும் சபையில் முழங்குபவனே நீ வாழீர் 


வெற்றியோடு நின்றுவிட்ட அரசியல் சரித்திரத்தை 
மாற்றியெழுதி மக்களோடு மக்களாக 
துன்பத்திலும் வறுமையிலும் பங்கெடுத்து 
தூக்கம் கலைத்த செம்மலே நீவாழீர் 


ஏழையரசியலால் ஏழைகளுக்குப்
பயனேதும் இல்லையென்றுணர்து
நற்பணி மன்றமாய் நல் உள்ளங்களைத்தேடி 
ஏழைமனதில் நலம் நாடுபவனே நீ வாழீர் 


உன் திறமைக்கு நிகராக 
சேவையை உரமாக்கி மக்கள் சேவகனாய் 
மலரும் புன் சிரிப்புடன் 
சேவையில் மகிழ்ந்திடத்துடிப்பவனே நீ வாழீர் 


பிறசேவையின் செழிப்போடு
சேனையோடிணைந்து எம் ஊரின் பிரதிநிதித்துவம் 
சேனையிலும் ஓங்கிட சேனையின் 
சேவகனாய் மிளிரும் நண்பனே நீ வாழீர் 


இணையம் கற்றுத்தந்த ஈர்ப்புடனும் 
எதிர்பார்ப்பற்ற நட்புடனும் 
முகம் மலர்ந்த மொழிகளுடன் திகள்ந்து 
இன்று நடத்துனராய் உயர்ந்தவனே நீ வாழீர்


முத்துமுத்தாய் பதிவுகள் 
அட்டகாசமான படங்களென 
அன்பான பின்னூட்டங்களாய் 
பத்தாயிரம் அடைந்தவனே நீ வாழீர் 


சேனையில் நீ இருக்கிறாய் 
உறவுகளோடு கலந்திருக்கிறாய் 
உம்மோடு நாமிருக்கிறோமென்பதில் 
பெருமையடைகிறோம் நீ வாழீர் 


இன்றுமட்டுமல்ல என்றும் 
உன்பெருமை ஓங்கிடவும் 
உன் நண்மைகளால் நீ உயர்ந்து 
ஈருலகிலும் ஈடேற்றமடைந்திட 
இருகரமேந்திப்பிரார்த்திக்கிறேன் (ஆமீன்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

முனாஸ் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமைத் தோழர் முனாசிர் அவர்களை வாழ்த்திய கவிதை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...