பள்ளிநாள் வகுப்பறைமுதல்
பக்குவமெனை சேருமுன்னே
காதல் வலை விரித்து - என்னை
வீழ்த்திவிட்ட விந்தையானவளே...
கொண்டு விட்டேன் காதலென்று
நள்ளிரவு நடுநிசியிலும்
பத்திரமாய்க் காதல்தூது
பக்குவமாய் படைத்திருந்தேன்
அடைந்த எம் காதலுக்காய்
ஒருநாளேனும் உன் மடி துயில
காத்திருந்து பலவருடத் தவமிருந்து
ஏந்திக்கொண்டேன் மலராக
காதலில் வென்றவெர்களென
மார்தட்டி பெருமையும் கொண்டு
வாழ்வின் இன்பமாக
அடைந்தோமிரு கண்கள் - ஆதலால்
காய்த்த மரமானோம்
காதல் மாத்திரம்தான் சுகமென்றிருந்தேன்
திருமணத்தின் பின் கசந்திடச்செய்தாய்
நான் தொடர்ந்த மாறாக்காதல்
மகிழும் காதலை உன்னில் தேடுகிறது
உன்னில் நான் தெடிய காதல்
என்னையின்று தேடிடச்செய்கிறது
உனக்காகத் தொலைந்த நான்
எனக்காக வாழ்வைத்தேடுகிறேன்
தினம்தினம் நான் தேடும் காதல்
எனக்காக அழுது கண்ணீர்வடிக்கிறது
கருணையுள்ளம் உனையடைய
காதலுமின்று மன்றாடுகிறது
என்னுலகம் நீயென்று
உன்ககாக உருகிநின்றேன்
ஈரமற்ற உன்னுள்ளம் - எனக்காக
(காதல்) ஈகையிலும் சிந்திக்கிறது
நிர்க்கதியான நிரபராதிநான்
செய்திடாத குற்றத்திற்காய்
காதலோடு சிறைப்பட்டிருக்கிறேன்
விடுதலை வேண்டுமென்று
மனுத்தாக்கலும் உன்னிடமே....
மனத்தாக்கம் அடைந்தேனும்
மகிழும் வாழ்வுதனை நீ கொடு
என் ஏக்க வேதனைகளுக்கு
விடைகொடு பெண்ணே.....
என் வாழ்வின் கண்ணே......
இக்கவிதை நான் கண்ட ஒரு காதல் இது அவர்களுக்கே சமர்ப்பணம் என் மனதில் அவர்களுக்கான பிரார்த்தனை என்றுமிருக்கிறது (யாரும் என்னுடன் முடிச்சுப்போட வேண்டாம்)
0 comments:
Post a Comment