ஒடுக்கப்பட்டது சர்வாதிகாரமென்று
ஓர் சர்வாதிகாரியின் கூக்குரல்
உள்நோக்கம் ஊமையாக்கி
ஒலிக்கிறது உலகெங்கும்
42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்
குறிவைக்கப்பட்ட நாட்டு மன்னர்களை
குற்றம்சுமத்தும் அரக்கன் (அமேரிக்கா)
நிரூபிக்கப்ட்ட ஆயிரம் குற்றங்களுடன்
உலகின் முக்கியமான சர்வாதிகாரி
திரும்பிக் கேட்டவர்கள் யார்??
வளம்பெற்ற செல்வந்த நாடுகளை
வன்முறை ஆயுதமெடுத்து
எட்டப்பராய் ஊடுருவி
தான்செய்த கலவரத்துக்காய்
தானே உதவுகிறேனென்று
சின்னாபின்னமாக்கி காலில்
விழச்செய்த கொடுங்கோலன்
இவனை யாரென்று சொல்வது
ஈராக்கென்றும் எகிப்தென்றும்
(பல நாடுகளை)வீழ்த்தியதில் இன்று லிபியா
நாளை ஈரான் சிரியாவென்று
அத்தனை இஸ்லாமிய உலகையும்
அடிமைகளாக்கும் அடாவடித்தனம்
கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே....
1 comments:
உணர்வுகள் வரிகளில்
Post a Comment