இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, October 3, 2011

உன்மடி என்னுலகமம்மா.....



வீதியில் வீசப்பட்ட என்தேகத்தை 
தள்ளாத வயதிலும் தாங்கியது 
என் தாய் மடிதான்.....

ஆஸ்த்துமா நோயென்றார்கள் 
ஆஸ்தான உறவுகளோ 
ஆ......வென்றலறிப் பிரிந்தனர் 

தேடாத நோயெனைத் தொடர்ந்ததில் 
தேடியிருந்த சுற்றமெனக்கு 
சூனியமானதின்று...

நட்போடு நானிருந்தேன் 
உடன் பிறப்போடு களித்திருந்தேன் 
உயிராய் வந்தவளும் - அவள் 
உயிருக்காயெனை பிரிந்துவிட்டாள் 


என்னிரத்தம் குடித்தவர்களின் 
தாகங்களும் தீர்ந்துவிட 
நானருந்திய இரத்த(பால்)மென்தாய் 
ஏந்துகிறாள் அவள் மார்பில் 

உலகப்பிணச் சந்தையில் 
உயிர்களுக்கு மதிப்பில்லையம்மா 
உன் பாசக்கடலன்றி 
எனக்கேதுலகமம்மா.....?

உனை மறந்து தேடியிருந்த உறவுகள் 
உயிராய் உடனிருக்குமென்றிருந்தேன் 
உயிரோடு தவிக்க விட்டு 
உதிர்ந்ததன் நியாயம்தான் என்ன...??

வெருண்டோடும் உலகத்திற்காய் 
வெகுளியாய் அலைந்திருந்தேன் 
எனை விரட்டிய உலகம் 
உன் காலடியில் கிடத்தியது.....அம்மா 

உள்ளமது பொறுக்குதில்லையம்மா 
உலகத்து உயிர்களுக்கு தாயகமேயம்மா 
குபேரனாயானாலும் 
உன் மடிதான் சிறந்ததம்மா.....!

நோயொன்று எனையடைந்து 
உணர்த்திவிட்ட உன்பாசம் 
நோயின்றி நானுணர்ந்து 
உயர்ந்திருக்க வேண்டாமா...??

தனிமரமாய் உன்மடியில் மலர்ந்து 
உலகைச் சுற்றிவந்த எனக்கு 
உனைத்தவிர இவ்வுலகமே 
தூசுதானே அம்மா..........?? 


இவ்வரிகள் எழுதிய போது கண்ணீர் சிந்தினேன் என் தாய்க்காக.......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

நாவலந்தீவு said...

நோயொன்று எனையடைந்து
உணர்த்திவிட்ட உன்பாசம்
நோயின்றி நானுணர்ந்து
உயர்ந்திருக்க வேண்டாமா...??//

அருமை நண்பா... எளிய நடையில் உணர்ச்சி கவிதை.

யாதுமானவள் said...

ஹாசிம் எழுதியதிலேயே சிறந்த கவிதையாக இதைச் சொல்லுவேன். உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்..... வார்த்தைகள் சரளமாக உருள ஆரம்பித்துவிட்டது உங்கள் கவிதைகளில். பார்க்கும்போதும் படிக்கும்போதும் மிக்க மகிழ்வாய் உணர்கிறேன். தொடர்க இதுபோன்று இன்னும் பலப்பல கவிதைகளை.

வாழ்த்துக்கள்....!

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...