மாற்றானின் இரத்தமும்
வலியும் சமமென்றுணர்ந்த
மாமேதை கற்றுத்தந்த அகிம்சை
நாதியற்ற அனாதையாய்
போர்களோடின்று போர்புரிகிறது
வன்முறையில் உயிரொன்று பிரிவதை
ஏற்காத மனங்களறியும் அகிம்சை
நீ மரித்தாலும் மாறது என்னுள்ளமென்ற
உயிர்(மனிதங்)களைப் பார்த்து
வெட்கித் தலைகுனிகிறதிப்போ
சாதாரணமாய் சாவடிக்கும்
சாத்தான்களாய் இன்றய மனிதங்கள்
மீண்டுமொரு மனிதன் (காந்தியடிகளார்)
பிறந்துவிட்டால் அமைதி நிலைக்குமோவென்று
அகிம்சையும் ஆசைப்படுகிறது
ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்
அகிம்சைப் போராட்டங்களோடு - அன்னியனிடம்
அறவழியில் சுதந்திரம் பெற்றிருந்தும்
அயலவன் தரமறுக்கும் உரிமைக்காய்
அழுது மடியும் காந்திகளுக்கு
இனியாவது சுதந்திரம் கிடைக்குமா??
1 comments:
//ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான் //
என் புரட்சிக் கவியே
நீ தீட்டும் வரிகளுக்கு
ஏனோ இத்தனை கூர்மை
Post a Comment