இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, April 29, 2010

வடக்கு - கிழக்கு

வடக்கென்றும் கிழக்கென்றும்
பிரித்துப்பிரித்து
எத்தனை தடவை
உரத்துக்கூறுகிறீர்கள்
சேர்ந்தாலும் ஒன்றுதான்
பிரிந்தாலும் ஒன்றுதான்
எதிலும் எதுவுமில்லை
அரசியல் நாமம் சூட
உங்களின் லாபத்திற்காய்
மீண்டும் மீண்டும்
வழிதேடல் தீரவில்லையா

வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்
உணர்வுகளில் சேர்ந்தவர்களை
பிரிவினை வளர்பதில்
ஏது லாபம் கண்டீர்கள்

மீண்டுமொரு அவலம்
அரங்கேற்ற கதைவசனம்
தேடியதில் தேர்ந்தெடுத்தது
வடக்கும் கிழக்குமா?

வடக்கு கிழக்கு வாழ்
உறவுகளே......
உணர்வுகள் உக்கிப்போன
மானிடம் எனும்
மந்தைகளின் கபட
விளையாட்டுகளில்
சீர் குலைந்திடாதீர்கள்
வேற்றுமை வளர்த்ததில்
வெண்றவர் யாருமில்லை
ஒற்றுமை உலகில்
நாயகர்கள் நாமேதான்
பேதம் மறந்து
உண்மை உணர்வுடன்
ஒற்றுமை காக்க
ஒண்று திரள்வோம்
எம்மை வைத்து
உறுட்டப்படும்
பேத பந்துகளை
எமக்காக திசைமாற்ற
எம்மால் முடியும்
சிந்தனை செய்க
சிறந்ததை தேர்ந்திடுக...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...