இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

வெறுமை உலகம்


என் உலகின் நாயகியே
உனைத்துறந்ததால்
ஜடமாய் நானும்
திக்கற்று திசை மறந்து
புதுமை உலகில் சஞ்சரித்தது போல்
பிரமை வாழ்வுடன்
சங்கமித்திருக்கிறேன்

எம் உலகின் நினைவுகள்
நிதமும் நிழலாட
உணர்வுகள் இறுகிப்போய்
உன் பிரிவின் வலிகளால்
அமுதமும் நஞ்சாய்
உண்ண மனம் மறுத்து
உன் ஊட்டலின் சக்தியில்
உயிர் வாழ்கிறேனடி

எம் கூடலின் தித்திப்பில்
நாம் மயங்கிய நாட்களும்
எம் முத்தங்களின் அற்புதத்தில்
நாம் கண்ட ரசனையும்
எம் அணைப்பின் இறுக்கத்தில்
நாம் பிரிக்காத தேகமும்
பிரிந்த மாயமென்ன
என் கண்மணியே !

வாழ்வின் துயர்கள்
எம்மையும் தொற்றியதால்
எதிர்கால வாழ்வுக்காய்
காலம் எம்மை பிரித்தாலும்
நாட்களின் வேகம்
எம்மை ஒன்று சேர்க்கும் வரை
இன்று நாம் வாழும்
வெறுமை உலகை
நினைவுகளின் உணர்வுகளுடன்
வளமாக்குவோம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...