இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, April 23, 2010

தாய்ப்பாசம்என் தாயே..

ஈடு இணையற்ற
உன்னதம் நீ...

உன் உயிரில் என் உயிரை
உயிராய் வார்த்தவள் நீ..

உன் உதிரத்தையே
அமுதமாய் ஊட்டியவள் நீ...

கண்ணை இமை காப்பது பொல்
என்னையும் நீ காத்தாய்

நுளம்பு என்னை குத்தியதால்
வலியால் துடித்தவள் நீ...

நீ உண்ணாமல் என்னை
உண்ணச் செய்தாய்


கணவனையே மறந்து
அளவற்ற கருணையை
அள்ளித்தந்தாய்

என் தேவைகளை உனதாக்கினாய்
என்னை காத்து வளர்த்து
மனிதப்புனிதனாக்கினாய்

ஆதலால்......
உலகில் நான் கண்ட
அற்புதம் நீ

உன்நேசமது - என்றும்
வற்றா நீரூற்று

உன்னை நான் என் செய்தாலும்
பொறுத்து மன்னிப்பவளும் நீ

உன்பாச மழையில்
தினமும் குளிப்பதால்
தூய்மையாகிறேன்.
பல கோடி நன்றிகள்
உனக்கே அம்மா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...