பெற்ற தாய்..பிறந்த மண்..
கூடி மகிழ்ந்த நன்பர்கள்
நேசமாய் பழகிய உறவுகள்
அன்பாய் வளர்த்த செடிகள்
பரிவாய் பார்த்த பிராணிகள்
கொஞ்சிக் குலாவிய துணைவி
ஆசையாய் ஈன்ற மழலை
அத்துணையும் துறந்ததால்
வெளி நாடு
துயர் மனதுக்கு துன்பம் உடலுக்கு
வேலை வேலையாய்
வாழ்க்கை எல்லாம் வேலை
ஓடி ஓடித் தேய்ந்து
ஊழைத்துக் கொடுப்பது ஊரானுக்கு
ஊதியத்தை சுரண்டும் கயவர்களும்
மனிதனை மிருகத்தை விட
கேவலமாக நடத்தும் சாத்தான்களும
கூடிய வாழ்வு வெளி நாடு
மெளுகுவர்தியாய் தானுருகி
மற்றவருக்காய் வாழ்ந்தாலும்
சுகங்களேயற்ற மறட்டு வாழ்வு
வெளி நாடு
காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு
பட்ட அடிகளையும் துயரங்களையும்
அழகிய வாழ்கையாய் சித்தரிதப்பதால்
இவனும் ஒரு கலைஞன்
பல கஷ்டங்கள் கலந்து
இவன் வாழ்வை அழகாய்
வரைந்ததால் இவனும் ஒரு ஓவியன்
சந்தித்த இன்னல் மலைகளை
குடைந்து மீட்சி கொண்டதால்
இவனும் ஒரு சிற்பி
எதுவாகியும் ஏதுமில்லா வாழ்வு
வெளி நாடு
பலர் வாழ்கைக்காய்
தன் வாழ்வை அடகு வைத்து
வாழ்கையில் இருந்து வெளிப்பட்டதால்
நாடிய வாழ்வு
வெளி நாட்டு வாழ்வு.
0 comments:
Post a Comment