உன் தாயவளும்
உன் போன்ற பெண்தானே
உன்னோடு என் தாய்
பெற்ற பெண் எட்டு
எட்டையும் எட்டாய்
தானுருகி .........
கஷ்டங்கள் பல கடந்து
தன்னை பலி கொடுத்து
உங்களை வடித்தெடுத்தாள்
ஒன்றொன்றாய் கரைசேர்க்க
அவள் கடந்த இன்னல்கள்
வடுக்களாய் காயங்கள்
தேகமெங்கும்.......
வலிக்கிறது மனம்
சிந்திக்க மாட்டாயா?
உன்னையும் பெற்ற
எம் தகப்பன்
எம்மை விட்டகன்று
பாலர்களாய் அவள்
மடியில் தவழ்ந்த எம்மை
யாருமற்ற அனாதைகளாய்
நாதியற்று பட்டதுயர்
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?
எம்மோடு பிறந்த
மூத்தவன் துணைகொண்டு
அவளும் விறகு வெட்டி
அப்பம் சுட்டு
எம்மை வளர்த்தெடுக்க
தினம் தினம்
கண்ணீர் விட்ட எம்தாயை
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?
கண்மணி திரும்பிப்பார்
நீ வளர்ந்த பாதையை..
அதை மறந்து தாயவளை
தூற்றி...வீட்டை விட்டகற்றினால்
அவள் மனம் படும் வேதனையை
சிந்திக்க மாட்டாயா?
இத்தனை வருடம்
உனக்காக அவள் பட்ட
துயர்களை ஒரு நொடியில்
சுக்குநூறாக்கினாய்...
மனம் நொறுங்கிய
எம் தாய் படும் பாடு
நீ அறிவாயா
சிந்திக்க மாட்டாயா?
தாய் என்றொரு
மஹா அத்தியாயம்
உனக்கு அற்பமாய்
காட்டியது எது
உன் துணையா
உன் சுயநலமா
உன் மமதையா
எது வானாலும் உன்னால்
திரும்பப்பெற முடியுமா
அற்புதமான தாய்மையை
சிந்திக்க மாட்டாயா?
நாளை நீயும் தாயாவாய்
நீயும் நிச்சயம்
விரட்டப்படுவாய்
அன்று உணர்வாய்
இன்று எம் தாய் படும்
வேதனையை...
நீயும் பெண்தானே
சிந்திக்க மாட்டாயா?
உன் அண்ணனாய்
ஒரு உபதேசம்
உன் மழுங்கிய புத்தியில்
நீ செய்த இத்தவறை
போக்குவதற்காய்
உன் தாயடி சென்று மன்றாடி
மன்னித்தருள வைத்து
அவளுக்காய் என்றும்
உன் வாழ்வை அமைத்திடு
எம் தாய்க்கு சாந்தி கொடு
ஈடேற்றம் பெறுவாய்
அன்றேல் உன்னாசம்
உன்னால்தான்.....
என்னை மன்னித்திடு
குறிப்பு: இக்கவிதையின் கரு உன்மைச்சம்பவம் எனது நன்பனுக்கு நடந்தது அவர் தனது சோகத்தை என்னிடம் கூறியபோது என் மனக்கவலையில் எழுதியது இதை என் உறவுகளுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
0 comments:
Post a Comment