இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

கருச்சிதைப்பு...


உன் கருவாக உருவெடுத்ததால்
ஆனந்தம் அம்மா
உன் கரிசனையால்
வயிற்றுப்பாசறையில்
குதூகலம் அம்மா
உன் முக மலர்ச்சியில்
கடந்த மாதம் இரண்டரை
மறந்தேன் அம்மா

ஐயோ.....அம்மா
ஏன் அழுகிறாய்...
உன்னை உதைக்கிறேன் என்றா ?
இல்லை - என்னை
அழிக்க நினைக்கிறார்கள் என்றா ?
அம்மா நான் சத்தியமாக
உன் ஆனந்தக்குழந்தை
உன் ஆறுதல் குழந்தை

நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சிவகுமார் said...

தாயின் புகழ் பாடிய அன்புக் கவிஞனுக்கு என் வாழ்த்துக்களுடன் இந்த வலைப்பூவிற்குள் காலடி எடுத்து வைக்கிறேன்!

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி தங்களின் அனைத்து ஆதரிவிலும்தான் இத்தனையும் நன்றி அண்ணா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...