இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

சுற்றும் பூமி


பூமியின் சுழற்சியில்தான்
எமக்கு இரவும் பகலும்
சுழலும் பூமியை
கண்டவர் யாருமில்லை
ஆனாலும் சுற்றுகிறது பூமி

பூமி சுழன்றாலும்
நாட்கள் நகன்றாலும்
மானிடம் மாறவில்லையே
மாற்றானை சாய்த்து
தானேறி சவாரி செய்யும்
மூர்க்கத்தனம் மாறவில்லையே

அடுத்தவனின் தளம் பறித்து
தன்னாட்சிக்காய் வதை செய்யும்
மூடத்தனம் மாறவில்லையே
மாதர்களையும் பாலர்களையும்
காம வேட்கையில் பலி கொள்ளும்
வெறித்தனம் மாறவில்லையே
உழைக்காது ஒட்டுண்ணியாய்
வாழ்பவனும் மாறவில்லையே

மனிதா.... சிந்திக்க மாட்டாயா?
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...