இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, April 23, 2010

மனிதன் எனும் நான்


நீ மழை என்பதால்
உனககு அழ மட்டும் தெரியும்
நீ சூரியன் என்பதால்
உனக்கு சுட மட்டும் தெரியும்
நீ பனி என்பதால்
உனக்கு குளிர மட்டும் தெரியும்
நீ நிலா என்பதால்
உனக்கு ஒளிர மட்டும் தெரியும்
நீ சூறாவளி என்பதால்
உனக்கு சுழல மட்டும் தெரியும்
நீ அலை என்பதால்
உனக்கு கரைதொட மட்டும் தெரியும்

நான் மனிதன் என்பதால்
வதைக்கப்படுகிறது அழுகிறேன்
ஏமாற்றப்படுகிறது கலங்கிறேன்
தூற்றப்படுகிறது நொந்துகொள்கிறேன்
வஞ்சிக்கப்படுகிறது உடைந்துபோகிறேன்
பசிக்கிறது உணவில்லை
தாகிக்கிறது நீரில்லை
குளிரெடுக்கிறது போர்வையில்லை
தூக்கம் வருகிறது உறங்க இடமில்லை
கவலாயாய் உள்ளது தேற்ற யாருமில்லை
ஆசையுண்டு பகிர துணையில்லை
மனிதனாய் பிறந்ததால்
இத்தனை அவலங்கள்
மனிதனாய் படைத்த கடவுளே
மாற்று என்னிலை
அன்றேல் மடியவை நிம்மதி கொள்ள...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...