இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, August 10, 2012

காதலின் வெகுமானம் சந்தேகமா??


உன்னால் உனை உணராத போது 
உலகே உமக்கு இருளாயிருக்கும் 
வெகுநாளாகி வேரூன்றிய வாழ்விலும் 
வெதனைதரும் சந்தேகங்களெதற்கு 

மனதிற்கிட்ட கண்ணாடியால் 
காண்பதெல்லாம் காரிருளாகி 
கண்ணியமான வாழ்வையும் 
காவுகொள்ளச் செய்வததெற்கு 

சந்தேகிக்கத் துணிந்த உமக்கு 
எதையும் சரிகாணத்தெரிவதில்லை 
சரிகாணத்தெரிந்திருந்தால் 
சந்தேகமே குறிக்கிடாது 


உன் மீதுள்ள காதலுக்கு 
வெகுமானம் சந்தேகமாவென 
நீ சந்தேகிக்கிறாயென்று  தெரிந்ததும் 
உள்ளமங்கு இறந்துவிடுகிறது 

துரோகமே நினைத்திடா உளளமென்றுர்த்தியும் 
சாதாரண செயல்களைக் கூட 
வெவ்வேறாக முடிச்சிட்டு 
உன்மைக் காதலுக்கு கரும்புள்ளியிடுகிறாய் 

இரு உள்ளங்களின் இணைவில் 
திடமான நம்பிக்கையில் 
சரிகாணும் வாழ்வுகளில்தான் 
சந்தேகமற்ற வாழ்வும் மலரும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Seeni said...

unmai!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...