இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 9, 2014

உயிர்தரும் கவிதைகள்....

கவிதைக் காதலன் நான் 
என் காதல் தேவதை நீ... 
என் உயிராகிய கவிதைக்கு 
கருப் பொருளாகிய உடலும் நீ.....

உனக்காக எழுதிய 
ஆயிரமாயிரம் கவிதைகள் 
எனைப்பார்த்து ஏளனம் செய்கிறது 
உனைப்பார்த்துப் பரிதாபங்கொள்கிறது 

என் உள்மனதின் உணர்வுகளை 
கவிதைகளாய்ச் சேர்த்து 
படைத்து வைத்திருந்தும் 
இன்னும் புசிக்கப்படாது வீணாகிறது 

காதலித்துப்பார் கவிதை வருமென்றார் அவர் 
கவிதைகொண்டு காதலித்தும்  
வெறும் கனவுகளாகிப்போனது 
என் உணர்வுகளும் ஆசைகளும் 

உனைப்படைத்தளித்த 
இறைவனைப் புகள்கிறேன் 
என் வலிகள் வேதனைகளானாலும் 
என் வார்த்தைகள் உனக்காக 
கவிதைகளாய்த்தான் படைக்கப்படும் 

இன்றய என் படைப்புகள் 
உனக்கு மட்டும் அருவருப்பாகியும்...... 
ஏனதைத் தொடர்கிறேன் தெரியுமா? 
நாளை என் மரணத்தின் பின் 
கவிதைகளாய் உயிர்வாழுமென்பதால் 

கவிதைகளை உதாசீனப்படுத்துவது 
கவிஞர்களை கொலைசெய்வதற்கு சமம்
நானும் நடைபிணமாயத்தொடர்கிறேன் 
உனைக் காதலிப்பதால்தான் 

இக்கவிதைகளுக்காய் 
எனைவிட்டு நீ பிரிந்தாலும் 
வடு தீர்க்கும் மருந்தாகி 
கவிதைகள்தான் எனை வாழவைக்கும் 
என்றும் நீ நலம்வாழ என் பிரார்த்தனைகள் 

                            

குறிப்பு : முன்பொரு நாள் மனவேதனையில் வடித்திருந்த வரிகள் பிரசுரமாகவில்லை இன்று கண்டு வரிகளின் ஆழம் என் மனதில் தைத்தது கருவில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்தேன் ஆதலால் இன்று 29/11/2015 பிரசுரம் செய்கிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...