முதுமையிலும் பாட்டாளியாய்
முனைப்புடன் தொழில்செய்து
முதுகெலும்பற்ற வாலிபனுக்கு
முன்மாதிரியாக்கிய கரங்கள்
இரும்பைத் தொழிலாக்கி
விரும்பிக் கறை ஏந்தி
துலங்கும் வாழ்வுதனை
வழங்கிய கைகளிவை
வறுமை தீர்க்க வயதை ஈந்து
மரணம் எய்திடினும்
யாசகத்திற்காய் கை ஏந்திடா
சுவனத்துக் கரங்களிவை
சோம்பேறி மனிதா...
பார்... இப் பார் முழுதும்
படர்ந்திட்ட இக்கரங்களால்தான்
பஞ்சங்களும் பயந்தொழிகின்றது

0 comments:
Post a Comment