இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, July 18, 2016

கடலோரத்து மணலுக்கான எனது வாழ்த்து.......

கவிஞர்களை ஈன்றெடுத்த பாலமுனை
என்றோ உன்னையும் கவிஞனாய் ஈன்றிருந்தது
தனித்துவப் புலமையாய் உன் பரிணாமத்தால்
எம் தாய் மண்ணுக்கு என்றும் பெருமிதமே

நாம் கற்றிருந்தது ஒரே பாசறையானாலும்
எமை இரு வேறு திசைகளில் பயணிக்கச்செய்த
விதியின் சதுரங்கத்தில் கவித்துவம் என்னும்
ஒரு பாதை எமை மகிழ்வித்திருக்கிறது தோழா.....

தட்டுத்தடுமாறிய வாழ்வில் துணிந்து திசைதேடி
முனைந்து முத்தெடுத்து இன்று உன் சொத்தாய்
கடலோரத்து மணலைக் கையிலேந்தி நிற்கிறாய்
இக்காலத்தின் வெற்றியாளன்நீ வாழ்க வாழ்க!

இம் மணலின் அருமை போற்றிட
தமிழ் அறிஞர்கள் கூடிநிற்கும் வேளையில்
எமைப் படித்திடும் உள்ளங்களுக்கும் மகிழ்வுதர
என் மன முற்றத்தில் உண் மணலைத் தூவியிருக்கிறேன்

நல்லதோர் சமுகம் நோக்கிய படைப்பாளியாய்
சுமைகளேந்திய சொற்களால் செப்பனிட்டு
சமுகக் குறைகளாய்ந்திடும் கவிதைகளை
தன்னகத்தே கொண்ட மணலை மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்

சொற்ப வாழ்நாளில் சுடர்விடும் நன்னறங்களாய்
காலத்தால் அழியாத தமிழ்த்தொண்டாய்
இலக்கியப் பாதையில் விளக்கவுரைகளாய்
உம் படைப்புகளும் பதிவாகிட மனதாற வாழ்த்துகிறேன்

அனைவரும் கூடிக் குலாவும் கடலோரத்து மணல்போல்
அனைவர் மனதையும் கொள்ளைகொண்டதாய் அமைந்த
உன்னால் உருவாக்கிய இம் மணல் மீதும்
கலந்து மகிழும் சான்றோரையும் போற்றி வாழ்த்துகிறேன்.
நன்றிகள்.



நண்பன் முஹாவின் கவிதை நூலுக்கான என் வாழ்த்து என்றோ எழுதி சேமித்திருந்தேன் தமதமாய் பிரசுரித்தாலும் உள்ளத்தின் வெளிப்பாடு என்றும் உண்மையாய் அமைந்திருக்கிறது என்பது திண்ணம். நன்றிகள்





Related Posts Plugin for WordPress, Blogger...