சின்னப்பாலமுனை ஹிக்மா பாடசாலை சம்பந்தமான விடயம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் சில விடயங்களை எத்திவைத்திட கடமைப்பட்டிருக்கின்றேன் ஒரு சிலரின் விதண்டாவாதமும் இட்டுக்கட்டான தகவல்களும் அங்குள்ள சமுகத்திற்கும் பிரதி அதிபரான முகா அவர்களுக்கும் இழுக்கு வரும் விதமாக facebook போன்ற தளங்களில் பகிரப்படுவதையும் கண்டேன் அக்கருத்துகளை முழுவதுமாக மறுக்கிறேன் எதிர்கிறேன்.
கரையோரப் பிரதேசமான இக் கிராமத்தின் ஐந்து தசாப்தங்கள் கடந்த பழமை வாய்ந்த இப்பாடசாலையின் வரலாறு யாவரும் அறிந்ததே பின் தங்கிய பிரதேசமானதாலும் பிரதான வீதியிலிருந்து 1 KM தொலைவில் அமைந்திருப்பதாலும் பல பின்னடைவுகளை இப்பாடசாலை சந்தித்திருக்கிறது என்பது சத்தியம் இந்த ஒரு காரணத்தினாலேயே பிற பிரதேசங்களில் இருந்து வருகின்ற திறமையான ஆசிரியர்களாலும் அதிக காலம் இப்பாடசாலையுடன் தொடர முடியாத இக்கட்டான நிலை காணப்படுகிறது அதே நேரம் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை பயிற்சி ஆசிரியர்கள் கூட இப்பாடசாலைக்கு வழங்கப்படுவதும் விரும்பி வருவதும் மிகமிகக் குறைவு ஆசிரியர்கள் தங்கி சேவை செய்யக் கூடிய பௌதிக வளங்களும் இங்கில்லை ஒரு பாடசாலையின் மிக முக்கியமான தேவையான ஆசிரியர் நியமனம் சரியாக இல்லாததன் காரணமாக பாடசாலையின் வளர்ச்சி பின்தங்கிச் செல்கிறது
அரிதாகக் கிடைத்த வளங்களைப் பயன்படுத்தி இத்தனை காலமும் இப்பாடசாலை 9ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்து பல திறமையான மாணவர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதில் அச்சமுகத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்பாடசாலையுடன் ஒப்பிடும் போது ஏனைய உயர்தரப்பாடசாலைகள் மிகவும் தூரப்பிரதேசங்களில் அமைந்திருப்பதால் 09ம் ஆண்டுடன் வெளியேறுகின்ற அனைவரும் தங்களது கல்விகளைத் தொடர்வதில்லை அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள் தூரப் பிரதேசம் சென்று கற்றுவருவதில் உள்ள அசௌகரியங்கள் காரணமாக பெற்றோர்கள் சிறப்பாக கற்கின்ற பிள்ளைகளைக் கூட இடைநிறுத்தி விடுகிறார்கள் அதேபோல் கடற்கரையை அன்மித்த பகுதியாதலால் சில ஆண்பிள்ளைகள் கடற்கரையுடன் எதிர்காலத்தினைக் கடத்தக் கூடியதாக மாற்றிக்கொள்கிறார்கள் இவ்வாறான நிலையினைக் கருத்தில் கொண்டதால்தான் ஹிக்மா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரைக்குமாவது தரமுயர்த்த வேண்டும் என்று பாடசாலைக் சமுகத்தவரால் கோரிக்கை வைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை
எதிர்வருகின்ற வருடத்துடன் அதனை ஏற்படுத்தித் தருவதாக கல்விப்பணிப்பாளர் வாக்குறிதி அழித்திருப்பதாக அறிகிறேன் அது நடந்தேற இறைவனப் பிரார்த்திப்பதோடு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் எனவும் வினையமாக கேட்டுக்கொள்கிறேன்
இவை தவிர இப்பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதும் அவற்றை நிவர்த்திப்பதும் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது மேலே குறிப்பிட்டது போன்று ஆசிரியர் பற்றாக்குறை கட்டிட வசிதிகள் தங்குமிட வசதிகள் மலசல கூட வசதிகள் என்பவைகளைத் தாண்டி அதிபர் பிரச்சினை இருக்கிறது. கடந்த சில வருடங்களின் முன்னர் ஒரு அதிபரின் வழிகாட்டலில் புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் ஆசிரியர் விடயங்களில் மிகவும் முன்னேற்றகரமான சூழல் காணப்பட்டது அந்த அதிபரின் மாற்றுதலின் பின்னர் தற்போதய அதிபருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சபைக்கும் இடையேயான முறுகல் நிலையும் தற்போதய அதிபர் நியமனத்தின் பின்னரான பாடசாலையின் பின்னடைவு மேலும் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது என்பது ஒரு முக்கிய விடயம் அதிபரின் திறமையான அழுகையில் ஒரு பாடசாலையின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது என்பது தெட்டத்தெளிவான விடயமாதலால் அனைவரும் அதிபரை மாற்ற வேண்டும் அதனுடன் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பாரக்கிறார்கள்.
இந்த விடயத்திற்கும் இந்த சமுகத்தைச் சார்ந்த பிரதி அதிபருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை சமுக அக்கறையினை நோக்கமாகக் கொண்ட அனைவரது நடவடிக்கைகளுமே தவிர யாருடைய எந்தவித குரோதங்களோ தனிப்பட்ட கோபங்களோ அல்ல எதிர்கால எம் சமுகத்தின் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் அதற்கான அத்திவாரங்கள் சிறப்பாக அமைத்திட வேண்டும் என்கின்ற நல்ல நோக்கமே என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகின்றேன் தற்போதய அதிபர் எனது உற்ற தோழன் அவருக்கு எதிரான எனது கருத்தென்று பதிவு செய்யாது இந்த உண்மை விடயத்தினை அவரும் புரிந்து கொண்டு இச்சமுகத்தின் தேவையினை முடியுமான வரை நிவர்த்திப்பார் என்று எதிர்பார்க்கிறேன்
அனைத்து தரப்பினரிடமும் எனது வினையமான விண்ணப்பம் என்னவெனில் பின்தங்கிய இப்பிரதேசக் குழந்தைகளை மாத்திரம் கவனத்தில் கொண்டு இறைவனுக்கா யாரும் யார் மீதும் அவதூறுகளை விதைக்காது உங்களாலான உதவிகளை மாத்திரம் செய்து தாருங்கள் இறைவன் சுவனத்தில் உங்களை சேர்த்துக்கொள்வான் மிக்க நன்றி
1 comments:
ஊர்பள்ளி நிலைமையும் வேண்டல்களும் அதன் அவசியங்களுமாய் அருமையான அலசல் கட்டுரைப்பதிவு ஹாசிம். வேண்டுதல்களை செவி சாய்த்து நல்லதே நடக்க பிரார்த்திப்போம்.
Post a Comment