இன்பமான வாழ்வைச்சொல்ல
இயற்றிய வரிகளை
இயன்ற வரை நோக்கிடு
குழந்தையில் நீ கற்றதை
குறையின்றி நிவர்த்திக்க
குதற்கமான வழிகள் திறந்து
குறியாக்கிடு உயர்வுக்காய்
கற்க வேண்டிய நுட்பங்களை
கணக்கிடாமல் விட்டபயனை
கண்கெட்டபின் நமஸ்காரமாய்
கடிந்து நீயும் கலங்கிடுவாய்
காண்பெதெல்லாம் அழகென
காட்சிதந்த பெண்களை தொடர்ந்து
காதல் வலைவீசி, வீணடித்த
காலத்தை, நொந்து நீயும் அழுதிடுவாய்
வாலிப முறுக்கில் அலைந்து
வாழ்க்கை என்றடைந்த இன்பங்களின்
வாதியாய், ஏற்ற துன்பங்களுடன்
வாழ்விழந்து தவித்திடுவாய்
விதைப்பதுதான் விளையுமென
விலை சொடுது்து பெற்றவைகளாய்
விட்டுச்சென்ற பாதையில்
விடைகாணா மடந்தையாவாய்
நாளை உனக்காக விடியஇருந்தும்
நானடைந்த இன்று என
நாசம் விழைவித்த, பொழுதான
நாட்களை எண்ணி வருந்திடுவாய்
இன்றைய பொழுதை வென்று
இயன்றவரை நாளைக்காய்
இயற்றும் பாதையில் நின்று
இறுமாப்புடன் ஜெயித்திடு- மன்னன் நீயாவாய்
3 comments:
நண்பா தூங்கும் போது கூட ஏதாவது கவிதையை யோசித்து கொண்டு இருப்பீர்களோ, அருமை நண்பா வாழ்த்துக்கள். எளிய நடையில் உள்ளது.
@சசிகுமார்
நன்றி நண்பா நீங்கள் தான் உணர்த்தினீர்கள் ரசிகர்களுக்கு தொடரான பதிவுகளைத்தர வேண்டும் என்று அதனால் ஒவ்வொருநாளும் சிந்தனையில் ஈடுபட வைக்கிறது நன்றி
நம்பிக்கை தரும் கவிதை.வாழ்த்துகள் ஹாசிம்.
Post a Comment